பொதுஆல்பம்:

21-Feb-2013
1 / 19
சீர்காழியில் தமிழக அரசு கட்டியுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழிசை மூவர்களின் ஐம்பொன் சிலை.
2 / 19
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும் சப்பாத்தியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்.
3 / 19
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 65 லட்சம் மரக்கன்று நடும் விழா துவங்கியது. இதன் துவக்கவிழாவில் கலந்து கொண்டு சென்னை மெரீனா கடற்கரையில் ஆல மரத்தை நட்ட முதலமைச்சர் ஜெயலலிதா. அருகில் அமைச்சர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள்.
4 / 19
அசாம் மாநிலம் கவுகாத்தியில் முதலாவது மெகா விவசாய கண்காட்சி நடைபெற்றது. துவக்க விழாவில் பாரம்பரிய நடனமாடிய கலைஞர்கள்.
5 / 19
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பரதநாட்டியத்தில் அசத்திய மாற்றுத்திறனாளி கலைஞர்கள்.
6 / 19
கோடை காலம் துவங்குவதற்கு முன்பே தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்து வருகிறது. .சென்னை கோயம்பேடு சந்தையில் ஆந்திரா மற்றும் தமிழகத்திலிருந்து கொண்டுவரப்படும் தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
7 / 19
சென்னை அமைந்தகரையில் உள்ள "ஏபிகே ஓட்ஸ் டோசோகாய்' ஜப்பானிய தமிழக மையத்தில், ஜப்பானிய களிமண் கைவினை கண்காட்சி நடந்தது.இதில் வண்ண அலங்கார பூக்கள் உள்ளிட்ட பொருட்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.
8 / 19
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இறை தேடிய களைப்பில் ஓய்வெடுக்கும் வெளிநாட்டுப்பறவைகள்.
9 / 19
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, மத்திய அரசிதழில், , வெளியானதை வரவேற்று, அ.தி.மு.க., வினர், பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இடம் : ஐஸ் அவுஸ்.
10 / 19
மகாகும்பமேளாவை முன்னிட்டு வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்துக்களின் புனித விளங்காக வணக்கப்படும் பசுவினை தொட்டு மகிழும் வெளிநாட்டு பெண்.
11 / 19
ஊட்டி மலை ரயில் இன்ஜின் புதுப்பிப்பு பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வெள்ளோட்டம் நடந்தது.
12 / 19
கூடலூர் ஓவேலி பகுதியில் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக பயிரிட்டுள்ள கிராம்பு செடிகள்.
13 / 19
திருப்பூர், கூலிபாளையம் வித்யா சாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், பள்ளிகளுக்கு இடையேயான "சூப்பர் டான்சர்' என்ற நடனப்போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு மேயர் விசாலாட்சி பரிசு வழங்கினார்.
14 / 19
"இந்தோ-இத்தாலியன் சேம்பர்' அமைப்பு சார்பில், இயற்கை நூல் இழையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை இத்தாலிக்கு ஏற்றுமதி செய்வது குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூரில் நடந்தது. இத்தாலி நாட்டு தொழில் துறை வர்த்தக கமிட்டி திட்ட மேலாளர் விட்டோரியோ, இந்தோ-இத்தாலிய வர்த்தக தொடர்பு அதிகாரி ஆன்ட்ரியா உள்ளிட்டோர் துணிகளை பார்வையிட்டனர்.
15 / 19
சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெற்ற ஹிந்து ஆன்மிகம் மற்றும் சேவைக்கண்காட்சியின் 5 ஆம் ஆண்டு தொடக்கவிழாவில் சுவாமி சித்பவாநந்தா ஆசிரம பூஜ்ய ஸ்ரீ ஆசிரம ஓம்காராநந்தா சுவாமிகள் உரையாற்றினார்.
16 / 19
மாணவி ஸ்ரீஷாவின் பாரதியார் பாடல்களை கொண்ட "புதிய பாரதி' இசை ஆல்பம் வெளியீட்டு விழா கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நடந்தது. இசை ஆல்பத்தை தமிழக கவர்னர் ரோசய்யா வெளியிட்டார். அருகில், ஆல்பத்துக்கான இசை அமைப்பாளர் தீனா, இசைஆசிரியர் கிருஷ்ணக்குமார், பாரதியார் கொள்ளுபேரன் நிரஞ்சன் பாரதி, கலெக்டர் கருணாகரன் உள்ளிட்டோர்.
17 / 19
பசுமை தீர்ப்பாயத்தின் தடை நீக்கத்தை தொடர்ந்து, சட்டசபைக்காக கட்டப்பட்ட வளாகத்தை, சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக, மாற்றும் பணிகள், , தொடங்கப்பட்டது.
18 / 19
பொது வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி, வெறிச்சோடிய மூணாறில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஹாயாக... வலம் வந்தனர்.
19 / 19
ராஜஸ்தானம் மாநிலம், பொக்ரானில் நடந்த விமானப்படை வீரர்களின் போர் ஒத்திகையில், சி- 130 ரக போர் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதிக்கும் வீரர்கள்.
Advertisement