பொதுஆல்பம்:

22-Feb-2013
1 / 16
சில நேரத்தில் இப்படியும் வேலை செய்ய வேண்டியிருக்கு, காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில், திருட்டு மணல் எடுத்ததால் பிடிக்கப்போன காவலர்களை கண்டு வண்டி உரிமையாளர்கள் ஓடியதால், மாட்டு வண்டியை காவல் நிலையத்திற்கு ஓட்டிச் செலும் போலீசார்.
2 / 16
மூணாறில் பொது வேலை நிறுத்தம் காரணமாக ஓட்டல்கள் அடைக்கப்பட்டதால், போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அருந்தி பசியை போக்கினர்.
3 / 16
பெண் வன்கொடுமைக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்கக் கோரி டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நடிகையும், சமூக ஆர்வலருமான ஷபனா ஆஸ்மி.
4 / 16
மத்திய பிரதேச மாநிலம் கஜூராஹோ கோயிலில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியில் அபிநயம் பிடித்த நடன கலைஞர் உமா நம்பூதிபாட் சத்யநாராயணன்.
5 / 16
டில்லி நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை குல் பனாக்.
6 / 16
ஆவின் நிறுவனம் சார்பில், புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள, மில்க் சாக்லெட்டை முதல்வர் ஜெயலலிதா சென்னையில், அறிமுகம் செய்து வைத்தார்.
7 / 16
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவியர், வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் விதமாக தமிழ் வாழ்க என எழுத்துக்களாக நின்று, தமிழை வளர்க்க, உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.இடம்:அண்ணாநகர், வள்ளியம்மாள் கல்லூரி.
8 / 16
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து இஸ்ரோ சார்பில் வருகிற 25ம் தேதி பி.எஸ்.எல்.வி. - சி20 ராக்கெட் விண்ணில் பாயவுள்ளது. ராக்கெட்டில் இந்தியா - பிரான்ஸ் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட செயற்கைகோள் உள்பட, மொத்தம் ஏழு செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. வருகிற 23ம் தேதி காலை 6:00 மணி முதல், கவுண்டவுன் தொடங்கவுள்ளது. இது பி.எஸ்.எல்.வி.,யின் 23வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
9 / 16
சுவரோட்டியால் நாசம் செய்யப்படும் சுவர்களை சரி செய்ய மாநகராட்சியால் வெள்ளை சுண்ணாம்பு அடிக்கும் பணி நடந்து வருகிறது. சரி வெள்ளையடிச்சு சீர் செய்வாங்கன்னு பார்த்தா அடுத்து வரும் தேர்தலுக்கு அரசியல் விளம்பரம் செய்ய அவங்களே சுவர்களை பிடிச்சுக்குராங்கப்பா...! அதால மாநகராட்சியை எதிர்பார்த்து இருக்காம தாங்ளே வெள்ளையடித்து அழகிய ஓவியங்களை வரைந்து சுவர்களை அழகு படுத்தும் வேலையில் குதித்துள்ள காவல் துறை. சட்டஒழுங்கு மட்டுமல்ல சமூதாய சீர்திருத்தத்திலும் எங்களுக்கு பங்குண்டு என்பதை பதிவு செய்துள்ள திருவல்லிக்கேணி டி1 காவல் நிலையத்தார். இப்படி எல்லா ஏரியாவையும் போலீசே பிடிச்சுக்கிட்டா ஊர் சுத்தமாகுமே...!
10 / 16
5வது ஹிந்து ஆன்மிகம் மற்றும் சேவைக்கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த சுவாமி ரதம்.
11 / 16
5வது ஹிந்து ஆன்மிகம் மற்றும் சேவைக்கண்காட்சியில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
12 / 16
5வது ஹிந்து ஆன்மிகம் மற்றும் சேவைக்கண்காட்சியில் சத்ய சாய்பாபாவின் சேவைகள் கண்காட்சியில் இடம்பெற்றன.
13 / 16
ஊட்டி- குன்னூர் சாலையில் போக்குவரத்து போலீசார் இல்லையென்றாலும், நெரிசலுக்கு வழிவகுக்காமல், அணிவகுத்து வந்த வளர்ப்பு எருமைகள்.
14 / 16
ஊட்டி அருகே கெந்தொரை கிராமத்தில் விளைந்த கோதுமையை அறுவடை செய்யும் பணி முடிந்து, கதிரில் இருந்து கோதுமைகளை தனியாக பிரித்து, உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கிராமப் பெண்கள்.
15 / 16
பந்தலூர் புனித சேவியர் பள்ளியில்,விவேகானந்தர் பிறந்தநாள்விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் சூரியநமஸ்காரம் செய்த மாணவியர்.
16 / 16
திருப்பதி வெங்கடாஜலபதி உருவம் பொறித்த கடிகாரங்களை தயாரிக்க, சுவிட்சர்லாந்து செஞ்சூரியன் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. வைரக்கற்கள் பதித்த 333 கடிகாரங்களை தயாரித்து லண்டனில் ஏலம் விட, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.