பொதுஆல்பம்:

05-Mar-2013
1 / 10
எங்கே என் ஜீவனே.. சுஆண்டவன் அழகை அள்ளிக் கொடுத்திருந்தாலும், ஜீவனை காத்துக் கொள்ள இயற்கை உணவளிக்க வேண்டுமே என, கண்ணுக்கெட்டிய தூரம், காய்ந்து போன வயல்காடுகளில், பசிக்கு ஏதாவது தீவனம் கிடைக்கிறதா என ஏக்கத்துடன் தேடு திரியும் அழகிய மயில்கள். இடம்: கீரனூர் அருகே, திருச்சி- புதுக்கோட்டை சாலை.
2 / 10
பாம்பன் ரயில் பாலத்தில், கப்பல் மோதி சேதமடைந்த 121வது தூணில், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள, இரும்பு கிரில் தூணை கடந்து செல்லும் ரயில்.
3 / 10
அவசியம் குடை: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள், வெயிலில் காத்திருப்பதால் பாதிக்கின்றனர்.
4 / 10
தமிழ்நாட்டில், பூரண மது விலக்கு வேண்டி, உண்ணாவிரதம் இருந்த காந்தியவாதி சசி பெருமாளை,போலீசார் கைது செய்து மருத்து மனையில் அனுமதித்தனர். மருத்துவ சிகிச்சைக்கு பின், மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு அருகில் உண்ணாவிரதத்தை, மதுரை மாவட்ட முன்னால் ஆட்சியர், தியாகி லஷ்மிகாந்தன் பாரதி, சசிபெருமாளுக்கு பழரசம் கொடுத்து முடித்து வைத்தார்.
5 / 10
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற பேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் மாடல்.
6 / 10
வரத்து அதிகம் காரணமாக, திண்டுக்கல் மார்க்கெட்டில் குவித்துவைக்கப்பட்டுள்ள வெங்காயம்.
7 / 10
அய்யா வைகுண்டரின் 181-வது அவதார தினத்தையொட்டி நாகர்கோவிலில் இருந்து சுவாமி தோப்புக்கு பேரணி சென்றது.
8 / 10
வேலூர் மத்திய சிறையில் காலணி தொழிற்கூடத்தில் ஷூ தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள கைதிகள்.
9 / 10
போரூர், ராமச்சந்திரா பல்கலைக் கழகத்தில், "நோயாளிசார் மருந்தாய்வில் நன்னெறிகளும் ஆய்வு முறைகளும்' என்ற தலைப்பில், இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை, கவர்னர், ரோசய்யா துவக்கி வைத்து மாநாட்டு மலரை வெளியிட்டார்.
10 / 10
சென்னையில் தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் மூன்றாவது ரமாமணி நினைவு வரிச்சட்ட நீதி மன்ற போட்டியில் தஞ்சாவூரைச்சேர்ந்த சாஸ்தா பல்கலைக்கழக மாணவர்கள் முதல் பரிசு வென்றனர்.இவர்களுக்கு சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி ராஜா ரமாமணி நினைவு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.உடன் தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார்,தமிழ்நாடு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந் பாண்டியன்.
Advertisement