பொதுஆல்பம்:

17-Mar-2013
1 / 10
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட பலியான துணை ராணுவப்படையினருக்கு ஆதரவாக தேசிய மாணவர் அமைப்பினர் ஓடிசா மாநிலத்தின் புவனேஸ்வ் நகரில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர்.
2 / 10
நந்தம்பாக்கம் சென்னை வர்த்தகமையத்தில் துவங்கிய நகை கண்காட்சியில் இடம் பெற்ற கேரளா திருச்சூரில் கொண்டாடப்படும் பூரம் விழாவில் பங்கேற்கும் யானைகள் மாதிரி தங்கத்தால் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன . இதன் எடை 3.5 கிலோ , மதிப்பு சுமார் 1கோடியே 20 லட்சம்
3 / 10
அலகாபாத் நகரில் ஓடும் கணேஷ் நதியில் இந்து பக்தர்கள் புனித நீராடினர்.
4 / 10
ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் சம்பல் திருவிழா துவங்கியதையடுத்து பாரம்பரிய நடனமாடினர்.
5 / 10
மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில் இயங்கிவரும் இளம் விவேகானந்தர் செஸ் சங்கம் சார்பில் முன்னாள் ஆணழகன் பட்டம் வென்ற மனோகரின் 101-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
6 / 10
ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்டதையடுத்து அந்நகர மக்கள் செய்திதாள்களை ஆர்வத்துடன் படிக்கின்றனர்.
7 / 10
மதுரையில் தினமலர் சார்பில் நடந்த கல்விக் கண்காட்சியை பார்வையிடும் மாணவர்கள்.
8 / 10
மதுரையில் தினமலர் மற்றும் பார்க் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடந்த"மேலாண்மை படிப்புகளுக்கான வழிகாட்டுதல்' நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் ஒரு பகுதி.
9 / 10
பரங்கிமலை ராணுவ அதிகாரிகளின் பயிற்சி மையத்தில், அதிகாரிகளின் பணி நிறைவு அணி வகுப்பு நேற்று நடந்தது, அணிவகுப்பை முடித்த பின், நாட்டுக்கு பணியாற்றும் சந்தோஷத்தில், துள்ளிக் குதித்த, பெண் ராணுவ அதிகாரிகள்.
10 / 10
சென்னை ஹ கோர்ட் பெண் வழக்கறிஞர்கள் சங்க 50 வதுஆண்டு விழா நேற்று ஹ கோர்ட் வளாகத்தில் கொண்டாடப்பட்டது.இதில் சிறப்பு விருந்தினர்களாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்,சதாசிவம்,இப்ராஹிம் கலிபதுல்லா,யுசுப் இக்பால்,டெல்லி ஹகோர்ட் தலைமை நீதிபதி முருகேசன்,சென்னை ஹ கோர்ட் தலைமை நீதிபதிராஜேஷ் குமார் அகர்வால் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Advertisement