பொதுஆல்பம்:

19-Mar-2013
1 / 10
சென்னையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக வாயில் துணியை கட்டியவாறு மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர்.
2 / 10
மும்பையில் நடைபெற்ற விழாவில் ஹோலி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்று வண்ண வண்ண பொடிகளை தூவி மகிழ்ந்த இந்தி நடிகைகள்.
3 / 10
கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோவில் 44வது ஆண்டு விழா உச்சவ நாளையொட்டி ஆராத்தி நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவில் யானைகள் ஊர்வலம் வந்தன.
4 / 10
டில்லியில் நடைபெற்ற பேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று ஒய்யார போஸ் கொடுத்த மாடல்கள்.
5 / 10
மும்பையில் நடைபெற்ற பேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராகும் மாடல்கள்.
6 / 10
தம்பியின் கும்பாபிஷேகத்தை காண வந்த அண்ணன்கள்...! கோவை மருதமலையில் நடந்த கும்பாபிஷேக விழாவின் போது அருகே உள்ள வன பகுதியில் ஜாலியாக உலா வந்த காட்டு யானைகள்.
7 / 10
இயற்கை அன்னையை தாலாட்டும் கதிரவன்: அந்தி மாலை பொழுதினில், ஆதவன் ஓய்வெடுக்கும் நேரம் தேயிலை செடிகளை தாலாட்டிய படி, அஸ்தமிக்கும் சூரியன். இடம்: வால்பாறை அடுத்துள்ள நல்லமுடி பூஞ்சோலை.
8 / 10
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் வெள்ளை நிறத்தில் பூத்துக்குலுங்கும் "ஊமத்தம் பூ'. இடம்: சின்கோனா (டேன்டீ) சின்னக்கல்லார்.
9 / 10
மூணாறு அருகே மாட்டுப்பட்டி அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால்,வரும் சுற்றுலா சீசனில் படகுகள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
10 / 10
சேலம் மாவட்டம் மல்லூரில், மெது வடை, போண்டா, மிக்ஸர், கடலை பொறி, உள்ளிட்ட மசால் அயிட்டங்களை, வெளுத்து கட்டும் ஆட்டு கிடா.
Advertisement