பொதுஆல்பம்:

22-Mar-2013
1 / 10
சென்னை விமான நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள உள்நாட்டு முனையம் வழியாக வெளியே வந்த பயணிகள்
2 / 10
டில்லி பார்லிமென்ட்டை சுற்றிப் பார்க்க வரிசையில் காத்திருக்கும் கல்லூரி மாணவிகள்.
3 / 10
ஊட்டி உதவும் கரங்கள் மற்றும் பொதுநல சங்கங்கள் இணைந்து நடத்திய இலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில், ஆர்வமுடன் தனது பெயரை பதிவு செய்த சிறுவன்.
4 / 10
உலக வனபெருக்க தினத்தை முன்னிட்டு, ஊட்டியில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள்.
5 / 10
ஆந்திர மாநிலம் பல்காம்பேட்டில் உள்ள எல்லம்மா கோயிலில், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி பிரார்த்தனை மேற்கொண்டார்.
6 / 10
மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோவில் பங்கேற்று ஒய்யார போஸ் கொடுத்த நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ்.
7 / 10
மும்பையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சோகா அலி கான், கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜாவின் மனைவி கராபி கைலாஷ்.
8 / 10
நீரின்றி அமையாது உலகு: கண்ணீர் சிந்தி உழைப்போரை இளைப்பாற்றும் இறைவன் தண்ணீர்; அதை உணர்ந்து, உலக தண்ணீர் தினத்தில் நீரை சிக்கனமாய் பயன்படுத்த உறுதிபூண்டால், அடுத்த தலைமுறையின் தவிப்பை தவிர்க்கலாம். போருக்கு இணையான பாதிப்பு, நீரில்லை என்றாலும் வரலாம். சிந்திப்போம், "இன்று உலக தண்ணீர்' தினம்.
9 / 10
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில், மீனவர்களின் வலையில் சிக்கிய பேசாளை மீன்கள், கூடைகளில் வைக்கப்பட்டுள்ளன.
10 / 10
இன்று முதல் அமல்: ராமேஸ்வரம் கோயிலில் 22 தீர்த்தங்களில் நீராடும் பக்தர்களின் கையில் அணிவிக்கவுள்ள, "பார் கோடிக்' பொருத்திய "கேன்ட் டிராக்' (அடையாள)ஸ்டிக்கர்.
Advertisement