பொதுஆல்பம்:

26-Mar-2013
1 / 10
சுகாதாரம் என்ன விலை: குடிநீர் குழாய் கசிவு நீரை பிடித்துச் செல்லும் கிராம பெண்கள். இடம்: நரிக்குடி அருகே சாத்திசேரி.
2 / 10
கர்நாடக மாநிலம், சிக்மகளூரில், மழை வேண்டி, இரு சிறுவர்களுக்கு, திருமணம் செய்யும் வினோத நிகழ்ச்சி நடந்தது.
3 / 10
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சினிகிரிப்பள்ளியில், முகாமிட்டுள்ள யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டிய போது, யானைகள் ஊடே துர்க்கம் வனப்பகுதிக்குள் புகுந்தது.
4 / 10
ராமநாதபுரம் மாவட்டம் துரத்தியனேந்தல் கிராமத்தில், காவிரி குடிநீர் சப்ளை இல்லாததால், வைகை ஆற்றில் பள்ளம் தோண்டி ஊறும் தண்ணீருக்காக காத்திருந்து, அகப்பையில் சேகரிக்கும் பெண்கள்.
5 / 10
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை சுப்ரீம் அட்டை மில் நிறுவனத்தால் பாதிப்பில்லை என அக்கரைப்பட்டி கிராம மக்கள்,சு மில்லை இயக்க அனுமதிக்ககோரி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
6 / 10
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே, பட்டணம் கிராமத்தில், ஏரியில் மண் சரிந்து விழுந்ததில், 4 பெண்கள் இறந்தனர். மண் சரிந்த இடத்தில் பொக்லைன் மூலம், மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
7 / 10
கேரளா ராஜாக்காடு அருகே, கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் விபத்துக்குள்ளானதால் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கும் பணி நடந்தது.
8 / 10
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதி திராவிட நலத்துறை அலுவலகம் ஜப்தி செய்யவந்த கோர்ட் ஊழியர்கள் மின்விசிறி, மேஜைகளை எடுத்துச்சென்றனர்.
9 / 10
ராமநாதபுரம் அரசு டவுண்பஸ் 11ல் இருந்து வரும் கரும்புகை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது. "மாசு, தூசு' என எதையும் லட்சியப்படுத்தாமல், விபத்திற்கு வழி வகுக்கும் வகையில், மொபைல்போனில் பேசியபடி டூவீலரில் செல்வோர், குடும்பத்தையும் கொஞ்சம் நினைக்க வேண்டும்.
10 / 10
செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்பவர், தனது சொந்த நிலத்தை மீட்டு தர கோரி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் தனது குடும்பத்தினருடன் திடீரென மண்ணெணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினார்.
Advertisement