பொதுஆல்பம்:

29-Mar-2013
1 / 10
விட்டாச்சு லீவு...! கோவை, மேட்டுப்பாளையம் ரோடு, முருகன் மில் அருகிலுள்ள சாக்கடைக்குள் வலையுடன் இறங்கி, இச்சிறுவர்கள் என்ன பிடிக்கிறார்கள் என, விசாரித்தபோது, "மீன் பிடிப்பதாக' தெரிவித்தனர். பள்ளிக்கு கோடை விடுமுறை துவங்கியாச்சு... இவர்கள் சாக்கடையிலும் மீன் பிடிப்பார்கள்; சாலையிலும்கூட மீன் பிடிப்பார்கள்; பெற்றோர் பாடு திண்டாட்டம் தான்.
2 / 10
மும்பையில் நடைபெற்ற தனியார் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஷில்பா ஷெட்டி.
3 / 10
டில்லியில் கடும் வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. கோடையின் வெம்மை காரணமாக ஏற்பட்ட தாகத்தை தீர்த்துக் கொள்ளும் யானை.
4 / 10
மாத்தாப்பூ அர்ச்சனை: பழநி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு நடந்த வாணவேடிக்கை ஒளியில்,ஜொலித்த மலைக்கோயில்.
5 / 10
மும்பையில் நடைபெற்ற விழாவில் இத்தாலி மாடல் நடாலிய கோசினோவாவுடன் போஸ் கொடுக்கும் இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பால்.
6 / 10
குன்னூர் சிம்ஸ் பூங்கா கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள மலர் தொட்டிகள் மத்தியில் நின்று போட்டோ எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்.
7 / 10
ஊட்டி தாவரவியல் பூங்கா புல்தரை, கோடைசீசன் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது.
8 / 10
ஆந்திர மாநிலம் அனந்த்பூரிலிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டுவரப்படும் கிர்ணி பழங்கள் கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.டீசல் விலை உயர்வால் தற்போது பழங்களின் விலையும் கனிசமாக உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
9 / 10
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காது கேளாத பள்ளி மாணவிகள்.
10 / 10
மஞ்சூர் அருகே பரமுலா சுற்றுவட்டார பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கரில் காரட் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Advertisement