பொதுஆல்பம்:

29-Mar-2013
1 / 10
சென்னை நொளம்பூர் வேம்புலியம்மன் கோயில் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
2 / 10
அரியானா மாநிலம், குர்கான் அருகே ஜார்ஷா கிராமத்தில், இரு பிரிவினர்களுக்கு இடையே நேற்று ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து, சாலைகளில் ஆட்டோக்களை சரித்து வைத்து தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். சரிந்த ஆட்டோக்களுக்கிடையே, பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசார்.
3 / 10
ஆயுதம் வைத்திருந்த வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள, பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உணர்ச்சி வசப்பட்டு அழுத சஞ்சய் தத்தை, தேற்றுகிறார், அவரது சகோதரியும், எம்.பி.,யுமான, பிரியா தத்.
4 / 10
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி சார்பில் மாணவர்கள் உயர்நீதி மன்றத்திலிருந்த சென்ட்ரல் ரயில் நிலையம் வரை செல்ல முயன்றனர்.இவர்களை தடுத்து நிறுத்த மெமோரியல் ஹால் முன்பு குவிந்திருந்த போலீசார் கூட்டம்.
5 / 10
கோர்ட் உத்தரவிருந்தும் விதிகளை மீறும் மெகா சைஸ் விளம்பர பேனர்கள். சென்னை மாநகராட்சி சார்பில் அத்துமீறும் விளம்பர பேனர்கள் தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்த நிலையில் இது போன்ற பேனர்களுக்கு தடை வருமா. மாநகராட்சியே இந்த மெகா சைஸ் விளம்பர பேனரை தையிரியமாக அகற்றுமா...? இடம் - சென்னை தலைமைச் செயலக வளாகம்.
6 / 10
திருச்சியில் காங்கிரசார் மாணவர்களை தாக்கியதை கண்டித்து நெல்லையில் காங்.,அலுவலகத்தை முற்றுகையிட வந்த அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
7 / 10
மத்திய அரசுடன் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் பால் மல்கித் சிங்.
8 / 10
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, வி.கூட்ரோட்டில், நான்கு வழிச் சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு, சாலைமறியலில் ஈடுப்பட்டனர். அதனால், இருவழிப்பாதைகளில், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
9 / 10
கோவை, கரும்புக்கடை அருகே, கார் மீது, மினி லாரி மோதியதால், உக்கடம் - பாலக்காடு ரோட்டில், நேற்று மாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
10 / 10
ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டியில் அடித்த ‹றாவளிகாற்றில், குலையுடன் முறிந்துவிழுந்த வாழைகள்.
Advertisement