பொதுஆல்பம்:

04-Apr-2013
1 / 10
ராமேஸ்வரம் கடற்கரையில் குப்பையோடு புதைந்து, உருகுலைந்து கிடக்கும் ரூ.ஒரு கோடி மதிப்பிலான பவளம் மீட்பு படகு.
2 / 10
டில்லி மெட்ரோ ரயில், மூன்றாம் கட்ட பணிகள், நிறைவுடையும் நிலையில் உள்ளன. ஜன்பாத் மெட்ரோ ரயில் நிலையத்தில், இறுதி கட்ட பணிகள், நடந்து வருவதை காணலாம்.
3 / 10
உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத், திரிவேணி சங்கமத்தில், கோடிக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்ட, கும்பமேளாவில் பக்தர்கள், காணிக்கையாக செலுத்திய, நாணயங்கள் மற்றும் தங்க நகைகளை, கங்கை நதியில் தேடும் உள்ளூர் வாசிகள்.
4 / 10
டில்லியில் நேற்று நடந்த, சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் முனைவோருக்கான, தேசியவிருது வழங்கும்விழாவில், பெண்தொழில்முனைவோருக்கான,முதல்பரிசை, "இம்பீரியல்' வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு நிறுவனத் தலைவர், ரூபி கார்க்குக்கு,ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
5 / 10
நீர்மட்டம் குறைந்து சிறு குளம் போல் வைகை அணை காட்சியளிக்கிறது.தற்போதைய நீர்மட்டம் 45.96 அடி(71).
6 / 10
கோடை விடுமுறை அறிவிச்சாச்சு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமான பயணிகள் நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்து தட்க்கல் டிக்கெட்டுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
7 / 10
சென்னை தலைமைச் செயலக சட்டசபையில் சத்துணவு மற்றும் சமூக நலத்துறை மானிய கோரிக்கை நேற்று நடந்தது. இதையடுத்து சமூகநலத்துறையில் தங்களது மானியமான மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையும் அடங்கும் என்று சபையில் அதன் விவாதத்தை காண மதுரையிலிருந்து வந்த பார்வையற்றவர்கள்.
8 / 10
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுக்குழுக்கூட்டம் திருப்பூர் காதர்சலீமா மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் துரைசிங்கம் பேசினார்.
9 / 10
கீழக்கரை முகம்மது சதக் கல்லூரி நிறுவனர் நாள் விழாவில் சென்னை அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஜெனீபர் மெக் இன்டையர் பேசினார்.
10 / 10
திண்டுக்கல் மாசிலாமணிபுரத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தில், இலவச கிரைண்டர்,மிக்சி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் வராண்டாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Advertisement