பொதுஆல்பம்:

04-Apr-2013
1 / 10
கூடங்குளத்தில் அணுஉலை எதிர்ப்பாளர்கள் நேற்று கடல்வழியாக முற்றுகையிட்டபோது, கண்காணிப்பில் ஈடுபட்ட கடலோர காவல்படை போலீசார்...
2 / 10
டில்லி, ராஜ்கோட் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் தனது வீட்டை இடித்ததை கண்டித்து உடலில் தீ வைத்துக் கொண்டார்.
3 / 10
இலங்கை தமிழர் பிரச்னை காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் நேற்று மீண்டும் திறந்ததையடுத்து, திருச்சி கண்டோண்மெண்ட்டில் உள்ள மிகின் லங்கா விமான டிக்கெட் நிறுவனத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
4 / 10
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பிடிபட்ட கடத்தல் கும்பல் வந்த கார்.உள்படம்:திண்டுக்கல்லில் கடத்தப்பட்ட கேரள வாலிபர் அனில்குமார்.
5 / 10
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே, விபத்துக்குள்ளான, கார் மற்றும் பேருந்து.
6 / 10
கடலூர், விருத்தாசலத்தில் அரசு கல்லூரி மாணவர்கள், வாக்காளர் அடையாள அட்டையை எரித்து போராட்டம் செய்ததால், பரபரப்பு நிலவியது.
7 / 10
மதுரை , மேலூர் முகமதியாபுரத்தில், வீட்டில் பதுக்கி வைத்து விற்றதாக பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் பொருட்களை, வட்ட வழங்கல் அதிகாரி சரவண பெருமாள் ஆய்வுசெய்தார்.
8 / 10
ஓய்வூதிய பலன்களை வலியுறுத்தி, மதுரையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது.
9 / 10
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் நேற்று கடல்வழியே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஒரு படகில் உதயக்குமார் உள்ளிட்டவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி வந்தனர்.
10 / 10
கூடங்குளத்தில் மின்உற்பத்திக்கான பணிகள் தீவிரமடைந்திருப்பதால், அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் நேற்று கடல்வழியாக அணுவிஜய் ஊழியர்கள் குடியிருப்பை முற்றுகையிட்டனர்.
Advertisement