பொதுஆல்பம்:

08-Apr-2013
1 / 10
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கோவை ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரி சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. வ.உ.சி., மைதானத்தில் துவங்கி, ஆவாரம்பாளையம் மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்த பேரணியில், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மாணவியர் பங்கேற்றனர்.
2 / 10
ஆசியாவின் பெரிய தூலிப் தோட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது. தால் ஏரி அருகில் ஜாபர்வன் மலைப்பகுதியில் உள்ள இந்த தோட்டத்தை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
3 / 10
கலைமாமணி கிருஷ்ண குமாரி நரேந்திரனின் மாணவியயான ஜெய்வர்ஷினியின் பரதநாட்டிய அரங்கேற்றம் சென்னை நாரதகான சபாவில் நடந்தது. பாலா கனகா மாயா வகையில் அட்டானா ராகத்தில் ஆதி தாளத்தில் ஆடி அசத்திய ஜெய்வர்ஷினி.
4 / 10
வழிகாட்டி மூன்றாம் நாள்... குவிந்த மாணவர்கள் கூட்டம்...: மாணவர்களுக்காக வழிகாட்டும் தினமலரின் வழிகாட்டி நிகழ்சி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி., மைதானத்தில் நடந்து வருகிறது.வழிகாட்டி கருத்தரங்கு அரங்கில் குவிந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூட்டம்.
5 / 10
ஒடிசா கடற்கரை பகுதியிலுள்ள வீலர்ஸ் தீவிலிருந்து அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இலக்கை நோக்கி துல்லியமாக சீறிப் பாயும் அக்னி-2.
6 / 10
வெயில் காலங்களில் பொதுமக்களின் வெப்பத்தை தணிப்பதற்காக, தர்பூசணி பழ சீசன் துவங்கி உள்ளது. இடம்: ராயப்பேட்டை.
7 / 10
முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடரும் வறட்சியினால், மரங்களில் இலைகள் உதிர்ந்து வெறும் கிளைகள் உள்ள காட்சியும், மாலை நேரத்தில் ரம்மியத்தை ஏற்படுத்துகிறது.
8 / 10
திருநங்கைகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை, கோவை, தேக்கம்பட்டி பகுதியில் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநங்கைகள், தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை மகிழ்ச்சியுடன் காட்டினர்.
9 / 10
உலக சுகாதார தினத்தையொட்டி கோவில்பட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் நொறுக்குத்தீனிகளை எரிக்கும் விழிப்புணர்வு நிகழ்வை மேற்கொண்டனர்.
10 / 10
ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ளதால், மலை ரயிலில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.