பொதுஆல்பம்:

08-Apr-2013
1 / 10
கழுகு' பார்வையில் கண்ணீர் காட்சி: திருச்சியில் அகண்ட காவிரியாய், கரை புரண்டோட வேண்டிய காவிரி ஆறு, கர்நாடக அரசின் ஏய்ப்பு, பருவமழை பொய்ப்பு காரணமாக, கண்ணுக்கெட்டிய தூரம் வரை வறண்ட பாலைவனமாய் காட்சியளிக்கிறது.
2 / 10
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரியில் பாதுகாப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ள கிராம தற்காப்பு கமிட்டி உறுப்பினர்கள்.
3 / 10
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தால், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, விசைப்படகுகள்.
4 / 10
சீரான முறையில் குடிநீர் வினியோகிக்கப்படாததை கண்டித்து, கிட்டாம்பாளையம் பெண்கள், காலிக்குடங்களுடன், கலெக்டர் கருணாகரனை முற்றுகையிட்டனர்.
5 / 10
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலுள்ள சுற்றுலாத்துறையின் வரவேற்பு மையத்தில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு படை வீரர்.
6 / 10
கோவை தொழிற்சாலையில் பல மாதமாக பணியாற்றிய வந்த சாம் சர டூடூ என்ற மாவோஸ்ட் பீளமேடு போலீசார் பிடித்தனர்.
7 / 10
திண்டுக்கல்லில் காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மூடைகளுடன் கைது செய்யப்பட்ட, (இடமிருந்து) காசிபாண்டி, சங்கிலிதேவன், ஒச்சப்பன்.
8 / 10
விழுப்புரம் ரயில் நிலையத்தில் அதிகாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் டீசல் இன்ஜின் பழுதானதால் மாற்று இன்ஜின் பொருத்திய பின் ரயில் புறப்பட்டது.
9 / 10
தூத்துக்குடி அருகே, விபத்தில் சிக்கி, ரோட்டோரம், தலைகுப்புற கவிழ்ந்த, அ.தி.மு.க., பிரமுகரின் கார். இதில், ஒரு பெண் பலியானார். மேலும், ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
10 / 10
சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே சந்தையிலிருந்து கொட்டப்படும் கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படாமல் உள்ளது.இதை சிலர் தீயிட்டு எரித்துவிடுவதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறியதுடன் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
Advertisement