பொதுஆல்பம்:

15-Apr-2013
1 / 11
மதுரை அருப்புக்கோட்டை ரோடு, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில், தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், அவர்களின் குடும்பத்தினர் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
2 / 11
மும்பையில் நடைபெற்ற தனியார் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பார்வதி ஓமனகுட்டன்.
3 / 11
தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை ஒன்றாம் தேதி குமரி மாவட்டத்தில் விஷூ தினமாக கொண்டாடப்படுகிறது. கோயில்களில் நடந்த கனிகாணும் நிகழ்ச்சியும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
4 / 11
தமிழ் புத்தாண்டையொட்டி கோவை மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள நாக சாய் மந்திர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஷீரடி சாய் பாபா.
5 / 11
மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்தின்போது, மீனாட்சி அம்மன், சுவாமி பிரியாவிடையுடன் அருள்பாலித்தனர்.
6 / 11
தூத்துக்குடி, சுரைக்காய்பட்டி கிராமத்தில், "பொன் ஏர்' திருவிழாவில், உழப்பட்ட நிலத்தில், விவசாயிகள், நவதானியங்களை தூவினர்.
7 / 11
டில்லியில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ், படத்தயாரிப்பாளர் மதூர் பண்டார்கர்.
8 / 11
மேட்டூர் அணைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில், 10 ஆண்டுக்கு பின் நீருக்கு வெளியே தெரிவதால், பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
9 / 11
கோடையில் எஞ்சிய நீரில், இரை தேடி அலையும் நாரைகள். இடம்: ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கை கணபதி ஏந்தல் கண்மாய்.
10 / 11
மதுரை வெள்ளலூரில் நடந்த வெற்றிலை பிரி திருவிழாவில், அனைத்து மக்களுக்கும் வெற்றிலையை பிரித்து கொடுக்கப்பட்டது.
11 / 11
பெரியாண்டிபாளையம், அகஸ்தீஸ்வரர் கோவிலில் சித்திரைக்கனி விழா நடந்தது. இதில் நடந்த கலைநிகழ்ச்சியில், நடனமாடி அசத்திய மாணவி விஷாலினி.
Advertisement