பொதுஆல்பம்:

15-Apr-2013
1 / 10
வறட்சியின் எல்லை... கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியதை உணர்த்துகிறது இந்த வறண்ட காடுகள். இடம்: பொள்ளாச்சி நவமலை ரோடு.
2 / 10
தெற்கு காஷ்மீர் பகுதியில் கடும் பனிபொழிவு நிலவி வருகிறது. ஆனந்தநக், கிஸ்துவார் இடையிலான சாலை போக்குவரத்து பனியால் முடங்கியதையடுத்து சிம்தான் பகுதியில் புல்டோசர் மூலம் பனிபொழிவு அகற்றப்படுகிறது.
3 / 10
பொள்ளாச்சி அருகேயுள்ள நல்லூர் கிராம மக்கள், மழைவேண்டி, மனித உருவத்தை பாடையில் வைத்து, தெருத்தெருவாக இழுத்து வழிபாடு நடத்தினர்.
4 / 10
மீன்பிடி தடைகாலம் இன்று முதல் துவங்குவதால், ராமேஸ்வரம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.
5 / 10
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு கோரிய தேவந்தர் பால் சிங் புல்லாரின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அனைத்து இந்திய சீக்கிய மாணவர்கள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
6 / 10
சேலம் அரசு மருத்துவமனையில், 1,000 ரூபாய் கேட்டு ஊழியர்கள் விரட்டியடித்ததால், பழைய பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடத்தில், ஆண் குழந்தையை பெற்றெடுத்த ஆந்திர பெண் லட்சுமி மற்றும் அவரது கணவர் குழந்தைகள்.
7 / 10
திருப்புத்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தி.மு.க., கூட்டத்திற்கு வந்த ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் குத்தாட்டம், கும்மாளம் போட்ட உடன்பிறப்பு.
8 / 10
விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சியில் தீப்பற்றி எரிந்த முந்திரி தோப்பில், தீயணைப்பு வீரர்கள் பச்சை இலைகளை கொண்டு அணைத்தனர்.
9 / 10
அபாயம் :திண்டிவனம்-மரக்காணம் சாலையில் உள்ள கிரஷர்களில் இருந்து ஜல்லிதுகள்கள் காற்றில் புகையாக பறந்து சுற்றுச்சூழலை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
10 / 10
வறட்சி பாதிப்பு: போதிய மழை இல்லாததால், பழநி அருகே சின்னக்கலையம்புத்தூரில் காய்ந்துள்ள தென்னை மரங்கள்.
Advertisement