பொதுஆல்பம்:

22-Apr-2013
1 / 10
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, வங்கக் கடலில் மீன் பிடிக்க 45 நாட்கள் தடை துவங்கியுள்ள நிலையில், சென்னை வானகரம் மீன் சந்தையில் அரபிக் கடல் மீன்கள் விற்பனை களை கட்டியது. ஆயிரக்கணக்கான மீன் பிரியர்கள் குவிந்ததால் சந்தையே திக்குமுக்காடியது.
2 / 10
கோல்கட்டாவில் நடைபெற்ற பேஷன் ஷோவில் கலந்து கொண்டு ஒய்யார போஸ் கொடுத்த நடிகை முக்தா கோட்சே.
3 / 10
நீயா நானா? என மோதிப்பார்த்து விடுவோம் வா! என சண்டையிடும் மான்கள். இடம் : கிண்டி சிறுவர் பூங்கா.
4 / 10
அழகே அழகு: சித்திரை திருவிழாவையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊஞ்சல் மண்டபம், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
5 / 10
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 8 ம் நாளில் நடந்த பட்டாபிஷேகத்தில், கோயில் இணை கமிஷனர் ஜெயராமனிடம், செங்கோல் வழங்கப்பட்டது.
6 / 10
உடுமலை சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
7 / 10
கொளுத்தும் கோடை வெயிலுக்கு காய்ந்து போன மரங்கள். இடம்: பொள்ளாச்சி- கோபாலபுரம் ரோடு.
8 / 10
குன்னூர் பர்லியார் வனத்தில், தூரிப்பாலம் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் வெயிலை தணிக்க நீரில் விளையாடிய காட்டு யானைகள்.
9 / 10
கேரளாவில் பலாபழம் விளைச்சல் அதிகரித்துள்ளதையடுத்து கோவை உக்கடம் பகுதியில் அதிக அளவுக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
10 / 10
தினமலர் நாளிதழ் நடத்தும் முதலாவது "ஜூனியர் டி20' கிரிக்கெட் போட்டி கார்மல் கார்டன் பள்ளியில் நடந்தது. கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர்(குற்றப்பிரிவு) சுகுமாரன் போட்டியை துவக்கி வைத்தார்.
Advertisement