பொதுஆல்பம்:

22-Apr-2013
1 / 10
மதுரை புதூரில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பு 4 நாட்களாகியும் சரி செய்யப்படாததால், தோண்டிய பள்ளத்தில் தேங்கிய நீரை பொதுமக்கள் குடிநீருக்காக சேகரிக்கின்றனர்.
2 / 10
டில்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். போராட்டத்துக்கு இடையே போலீசாருடன் அமர்ந்து போராட்டக்காரர் ஒருவரும் ஓய்வெடுத்தார்.
3 / 10
டில்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து மத்திய பிரதேசம் தலைநகர் போபாலில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுமிகள்.
4 / 10
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம் பூந்தோட்டத்தில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வரும் கோடை நடவுப்பயிர்கள்.
5 / 10
டில்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடு முன்பாக பா.ஜ.க. மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் பெண் போலீசார்.
6 / 10
டில்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பிரதமர் மன்மோகன் சிங் வீட்டை முற்றுகையிட ஓடி வந்த போராட்டக்காரர்கள்.
7 / 10
அரூர் பகுதியில், தெருநாய்கள் துரத்தியதில், கிணற்றில் விழுந்து இறந்த, ஆறு மான்களை, பிரேத பரிசோதனைக்காக, வனத்துறையினர் வாகனத்தில் எடுத்து சென்றனர்.
8 / 10
ஆட்டோவை கையில் "ஸ்டார்ட்' செய்வது வழக்கம். மதுரையில் மட்டும் தான், இது போன்று காலில் "ஸ்டார்ட்' செய்கின்றனர். "கொடுப்பதற்கு' மட்டும் தன் கை என அதிகாரிகள் நினைப்பதாலோ என்னவோ, இது போன்ற கால்களை அவர்களும் கண்டுகொள்வதில்லை. இடம்: மாவட்ட கோர்ட், மதுரை.
9 / 10
பா.ஜ., நிர்வாகி எம்.ஆர். காந்தி வெட்டப்பட்டதை கண்டித்து நாகர்கோவிலில் பா.ஜ.,வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 / 10
பேரையூர் பகுதியில், மழையில்லாமல் கருகிய பருத்திச் செடிகள்.
Advertisement