பொதுஆல்பம்:

23-Apr-2013
1 / 10
வந்தாச்சு வைகை... வர்றாரு அழகரு...: ஏப்.,25ம் தேதி மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக, அழகர் கோவிலிலிருந்து இன்று மாலை புறப்படுகிறார் அழகர். ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், வைகையின் கரைகளை தொட்டு ஓடியது.
2 / 10
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சித்திரை திருவிழாவின் 9 ம் நாளில் திக் விஐயம் புராண வரலாற்று நிகழ்வை குறிக்கும் வகையில், இந்திர விமானத்தில் அம்மன், சுவாமி, பிரியாவிடையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
3 / 10
சென்னை மெரினா கடற்கரையில் பூமி தினத்தை யொட்டி எக்ஸ்னோரா இண்டர் நேஷனல் மற்றும் அமெரிக்க தூதரகம் சார்பில் மாணவ மாணவியர் கையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.
4 / 10
கத்திரி வெயில் ஆரம்பிக்கும் முன்பே இப்படி வெயில் சுட்டெரிக்குதே... என வெப்பத்தின் மிரட்சியில் குடையுடன் செல்லும் மாணவிகள். “ இடம்: ராமநாதபுரம் கேணிக்கரை மெயின்ரோடு.
5 / 10
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பூமியையும், பெண் குழந்தைகளையும் காக்க வலியுறுத்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம்பெண்.
6 / 10
தமிழகத்தில், பூரண மது விலக்கு கோரி, பல நாட்கள் உண்ணாவிரதமிருந்து பரபரப்பை ஏற்படுத்திய சசிபெருமாள், சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் தனி பிரிவில் மனு கொடுக்க வந்தார்.
7 / 10
இரு கரையும் தொட்டு, பிரமாண்டமாக ஓடும் புனித கங்கை நதி, கோடை காலம் என்பதால், வறண்ட காவிரி ஆறு போல காட்சியளிக்கிறது. இடம்:உத்தர பிரதேசத்தின் அலகாபாத், திரிவேணி சங்கமம்.
8 / 10
மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும், ஊட்டி அருகே உள்ள எமரால்டு அணையில், தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
9 / 10
சபாஷ் அதிகாரிகள்: மதுரை புதூரில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்வதற்காக தோண்டிய பள்ளத்தில், தண்ணீர் வீணாகுவது குறித்து, தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சரி செய்தனர்.
10 / 10
மதுரை எஸ்.பி., அலுவலகத்தில், தண்ணீரை சிக்கனப்படுத்தும் வகையில், புதிய முறையிலான சொட்டுநீர் பாசனம் மூலம் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் முறையை பாலகிருஷ்ணன் எஸ்.பி., துவக்கி வைத்தார். அருகில் விவசாய அதிகாரி ஆறுமுகம்.
Advertisement