பொதுஆல்பம்:

23-Apr-2013
1 / 10
பா.ஜ.நிர்வாகி எம்.ஆர். காந்தி தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் பந்த் நடைபெற்றது. நாகர்கோவில் நகரில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு பஜார் வெறிசோடி கிடக்கிறது.
2 / 10
இலங்கை சிறையில் உள்ள, மீனவர்களை விடுதலை செய்ய கோரி, தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம் செய்த மீனவர்கள்.
3 / 10
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே அத்தானூரில், மாரிகண்ணுவின் வீடு, பராமரிப்பு பணியின்போது இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாகினர்.
4 / 10
குரோம்பேட்டை பஸ்டாண்டு நிழற்குடையில் தனியார் விளம்பர பலகை தொங்க விடப்பட்டிருந்தது . இது பிற்பகல் வேகமாக அடித்த காற்றில் கழன்று விழுந்து தொங்கி கொண்டிருக்கிறது .பல்வேறு இடங்களில் தனியார் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் பராமரிப்பில்லாமல் இப்படித்தான் தொங்கி கொண்டு இருக்கிறது.
5 / 10
டில்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
6 / 10
திருச்செந்தூர் முருகன் கோயில் பணியாளர்கள், திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், தரிசன டிக்கெட் கவுண்டர் வெறிச்சோடியது.
7 / 10
மே மாதமும் சம்பளம் வழங்க வலியுறுத்தி, பகுதிநேர ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம், மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது.
8 / 10
கப்பலூர்அருகே ரோட்டில், மினி லாரி கவிழ்ந்ததில், ஆக்சிஜன் சிலிண்டர்கள் சிதறி கிடந்தன.
9 / 10
ஸ்டெர்லைட் ஆலையை, நிரந்தரமாக மூடக்கோரி, தூத்துக்குடியில் நடந்த உண்ணாவிரதத்தில், ம.தி.மு.க., மாவட்ட செயலர் ஜோயல் பேசினார்.
10 / 10
காஞ்சிபுரம் கீழ்கரணை மக்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மதுராந்தகம் - செய்யூர் சாலையில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.