சம்பவம்ஆல்பம்:

19-Jun-2012
1 / 11
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த மந்திராலயா முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.
2 / 11
பலத்த காற்றின் காரணமாக நேற்று மெரினா கடற்கரையில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
3 / 11
தூத்துக்குடி அருகே அரசு பள்ளியில் தங்களுக்கு வழங்கப்பட்ட "பைபிளுடன்' மாணவ,மாணவியர்.
4 / 11
தபால் துறை டி.பி.எஸ்., அதிகாரி பரிமள் சின்ஹாவை பணியிட மாற்றம் செய்யக்கோரி, தபால் துறை ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இடம்: சென்னை தலைமை தபால் அலுவலகம்.
5 / 11
உடுமலை-மூணாறு ரோட்டில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள் குடிநீர் பருகுவதற்காக அமராவதி அணைப்பகுதிக்கு வருகின்றன
6 / 11
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
7 / 11
இந்தியாவின் வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் குளிக்கும் தண்ணீரை, குடிநீருக்கு பயன்படுத்த எடுத்துச்செல்லும் சிறுமி.
8 / 11
கர்நாடக மாநிலம் மங்களூரை அடுத்த மரவூர் பகுதியில் பெய்த தொடர்மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கு அணை கட்டுமானப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
9 / 11
கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் வீசிய பலத்த காற்றினால் அப்பகுதியில் இருந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் அங்கு மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.
10 / 11
பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரெஞ்சு தூதரக அதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கையை துரிதமாக எடுக்கவும், குழந்தை தொழிலாளர் முறையை எதிர்த்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
11 / 11
ராமேஸ்வரம் கடல்பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு மீன்துறை தடை விதித்துள்ளது. இதனால், ராமேஸ்வரம் கடற்கரையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன
Advertisement