சம்பவம்ஆல்பம்:

06-மார்ச்-2018
1 / 8
திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே நெடுஞ்சாலயில்,நேற்று முன்தினம் இரவு காரும் டூ - வீலரும் மோதியதில் தலைகீழாக கிடக்கும் கார்.
2 / 8
ரபேல் போர் விமானம் வா ங்குவதற்கான ஒப்பந்தத்தில், ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சா ட்டிய, காங்., இளைஞர் அணியினர், மத்திய, பா.ஜ., அரசை கண்டித்து, பார்லி., வளாகம் அருகே , நேற்று போராட்டத்தில் ஈடுபட்டன ர். இடம்: புதுடில்லி.
3 / 8
பஞ்சாப் தேசிய வங்கியில் நடந்த ஊழலை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பார்லிமென்ட் வளாகத்தில் காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 / 8
ஊழியர் தேர்வு கமிஷனில் நடந்த முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டி அலகாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 / 8
விருதுநகர் அருகே செங்கமல நாச்சியார்புரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கலெக்டரிடம் மணுக்கொடுக்க வந்தனர்.
6 / 8
நெருப்புடா..! அணைக்க அணைக்க மீண்டும் மீண்டும் பற்றி எரியும் தீ..! கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கு
7 / 8
சிரியா நாட்டில் நடக்கும் கொடூர தாக்குதலை கண்டித்து மதுரை டி.வி.எஸ். நகரில் பொதுமக்கள் சார்பில் மனித சங்கிலி நடந்தது.
8 / 8
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி கோரி, சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள்.