சம்பவம்ஆல்பம்:

24-Nov-2012
1 / 10
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிகவளாகத்தின் முதல் மாடி கடைஓன்றில் திடீரென தீ பிடித்தது தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
2 / 10
காஷ்மீரின் ஸ்ரீநகரில், மொகரத்தை முன்னிட்டு படமுல்லா பகுதியில் ஊர்வலம் செல்ல, போலீசார் தடை விதித்திருந்தனர். இதைக்கண்டித்து, போலீஸ் வாகனங்கள் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர்.
3 / 10
தர்மபுரி அருகே கலவரம் நடந்த கிராமத்தில், பெண்ணை கடத்தி கலப்பு திருமணம் செய்ததாக தெரிவிக்கப்பட்ட புகார் குறித்து, சம்பந்தப்பட்ட பெண் திவ்யா நேற்று, தர்மபுரி ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் ஆஜராக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தார்.
4 / 10
தொடர்மின்தடையால், ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் அலுவலகத்தில், விளக்கு,பேன் இயங்காததால், மரத்தடியில் உட்கார்ந்து பணிகளில் ஈடுபட்ட ஆடிட்டர் ஷியாம் .
5 / 10
தேனி மாவட்டம் முருகமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்ட கிணற்றில் நேற்று முன்தினம் தவறி விழுந்த சிறுத்தை, மீட்பு பணியில் ஏற்பட்ட தாமதத்தால் நேற்று அதிகாலை இறந்தது. அதனை தேனி வனத்துறை அலுவலக வளாகத்திலேயே ரகசியமாக எரித்தனர்.
6 / 10
மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உடல் நலக்குறைவு காரணமாக இறந்ததையடுத்து, சேலம் செவ்வாய்ப்பேட்டை பஜார் மெயின்ரோடு, வெறிச்சோடிக்கிடந்தது.
7 / 10
முன்னாள் தி.மு.க., அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உடல் நலக்குறைவால் நேற்று இறந்ததை தொடர்ந்து, தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் இருந்து பெற்றோர்கள் மாணவர்களை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
8 / 10
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் உழவர் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் மின் வெட்டை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
9 / 10
சேலத்தில் நேற்று காலை முதல் வானம் சற்று மப்பும், மந்தாரமாக காணப்பட்டது. மாலையில் லேசான மழை பெய்ததில், வாகனங்கள் முகப்பு விளக்கு எரிந்தபடி செசன்றன. இடம்: ஃபேர்லேண்ட்ஸ் போலீஸ் ஸ்டேசன்.
10 / 10
சென்னை நொளம்பூர் அடுத்த மேல் அயனம்பாக்கம் தனியார் பள்ளி அருகே தொழிற்சாலைகளிலிருந்து தேவையற்ற கழிவுகளை குவியல் குவியலாக கொட்டுகின்றனர்.இதனால் பசுமையான அப்பகுதி பாழாவதுடன் கழிவுகளால் மாசடைந்து வருகிறது.
Advertisement