சம்பவம்ஆல்பம்:

25-Nov-2012
1 / 10
'முன்னாள் தி.மு.க.,அமைச்சர் தமிழரசி சென்ற கார், திண்டுக்கல் மாவட்டம் குட்டிசெட்டிபட்டியில் ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.'
2 / 10
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள தார்சாலை மணல் லாரிகள் அணிவகுப்பால் சேதமடைந்துள்ளது.
3 / 10
தமிழ்நாடு மருத்துவ மாணவர் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
4 / 10
ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில், அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்தக் கோரி, ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்களை, போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், பெண் போலீஸ் அதிகாரியின், சட்டையை பிடித்து இழுத்து வன்கொடுமை செய்தார்.
5 / 10
சட்டவிரோதமாக லாரிகளில் பசுக்கள் கடத்தப்படுவதை கண்டித்து நெல்லையில் பசு பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 / 10
புதுக்கோட்டை அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியை தடுத்த தலித் சமுதாய மக்களை, நள்ளிரவு வீடு புகுந்து கைது செய்த போலீஸாரை கண்டித்து, பெண்கள் உட்பட, 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
7 / 10
திருப்பூரில், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தரைப்பாலம் மூழ்கியது. இதனால், மூதாட்டி ஒருவரை கட்டிலில் உட்கார வைத்து தூக்கிச் சென்றனர்.
8 / 10
சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, குன்னூர் வெலிங்டன் கன்டொன்மென்ட் வாரிய அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.
9 / 10
குன்னூர் 16வது வார்டுக்குட்பட்ட ஆரியமாலா காம்பவுண்ட் பகுதியில் உள்ள நடைபாதை, இரவு பெய்த கன மழையில் சேதமடைந்தது.
10 / 10
சிவகங்கை புதுத்தெரு முழுவதும் ரோடு பெயர்ந்து ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுவதால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
Advertisement