சம்பவம்ஆல்பம்:

04-Dec-2012
1 / 9
"டெங்கு' தாண்டவமாடும், மதுரை அரசு மருத்துவமனையின் நிலை தான் இது. சுதந்திரம் பெற்று, இத்தனை ஆண்டுகளாகியும்,"ஏழைகளின் புகலிடமான' அரசு மருத்துவமனைகளில் வசதிகள் இல்லை. இது, நோயாளிகளைப் பார்க்க வந்த உறவினர்கள் கூட்டமில்லை. இடப் பற்றாக்குறையால் உட்கார்ந்த நிலையில் சிகிச்சை பெறும் "டெங்கு' நோயாளிகள் தான் இவர்கள்!
2 / 9
ஒய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும், வாய்பேச இயலாத மற்றும் பார்வைத்திறனாளிகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர். இடம் : ஸ்ரீநகர்.
3 / 9
பாம்பன் சின்னபாலத்தில் கடல் உள்வாங்கியதால், தரை தட்டி நின்ற நாட்டு படகுகள்.
4 / 9
போபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படாததை கண்டித்தும், அத்துயர சம்பவத்தின் 28வது நினைவுநாளை முன்னிட்டும், டில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தை அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
5 / 9
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியை அடுத்த குல்மா பகுதியில் ரயில் மோதி யானை ஒன்று பலியானது. யானையின் உடலை ஆய்வு செய்யும் அதிகாரிகள்.
6 / 9
திண்டுக்கல், விராலிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கடன் தொகை தர தாமதமானதால், மகளிர் சுய உதவிக்குழுவினர் அலுவலகத்தை பூட்டினர். தங்களுக்கு அரசு வழங்கிய கடன் பத்திரத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
7 / 9
செடியில் பூச்சி தாக்கியதால், விலை குறைந்துள்ள குண்டு மிளகாய் வத்தல். இடம்:ராமநாதபுரம்
8 / 9
மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுகளை கண்டித்து திருவாரூர் அருகே வெள்ளக்குடியில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
9 / 9
டிசம்பர் 1 முதல், ஜூன் 1ம் தேதி வரை பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே, எல்.கே.ஜி., சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படும் என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ள பேனர். இடம்: சென்னை.
Advertisement