சம்பவம்ஆல்பம்:

18-Dec-2012
1 / 10
கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் கருவேலமரங்களை தீயிட்டதால் எழுந்த புகை போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. இதனால் விபத்தை தவிர்க்க முகப்பு வெளிச்சத்தில் வாகனம் ஊர்ந்து சென்றது.
2 / 10
காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிபொழிவு காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
3 / 10
கூடலூர் முண்டகுன்னு பகுதியில் யானையால் சேதமடைந்த வீடு.
4 / 10
ஒடிய பைக்கிலிருந்து எட்டிப்பார்த்த பாம்பு :சஆ பள்ளிக்கரணைலிருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் ஓட்டி வந்த பைக்கிலிருந்து எட்டிப்பார்த்த பச்சை பாம்பு இது தான்.
5 / 10
கல்லூரி முன் நாங்கள் ஆர்பாட்டம் செய்யாமல் இருக்க, எங்களை கலைந்து போகச் சொல்லிய போலீசார், எங்களை கேமராவில் படம் பிடித்து மிரட்டும் தோனியில் ஈடுபட்டனர் என மாணவியர் புகார் தெரிவித்தனர்.
6 / 10
பொன்னேரி-மீஞ்சூர் இடையே பஸ் வசதி குறைவாக இருப்பதைக் கண்டித்து, பள்ளி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
7 / 10
படுகர் சமுதாயத்தை பிரிக்கும் செயலை தடை செய்யக்கோரி, நாக்குபெட்டா படுகர் குல பாதுகாப்பு இயக்கம் சார்பாக, ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
8 / 10
கள்ளக்குறிச்சியில் பஸ் நிலைய நுழைவு வாயிலில் பஸ்களை நிறுத்தி பிரச்னையில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களிடம் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
9 / 10
ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு அருகில் அனுமதியின்றி செயல்பட்ட அம்மன் கலர்ஸ் சாயப்பட்டறையை, மாவட்ட மாசுகட்டுப்பாடு மையம் பொக்லைன் மூலம் இடித்து தள்ளினர்.
10 / 10
ராமநாதபுரத்தின் குடிநீர்ஆதாரமாக உள்ள முகவைஊரணிதூர்வாரப்படாமல் மாசுபட்டுள்ளது.
Advertisement