சம்பவம்ஆல்பம்:

19-Dec-2012
1 / 10
டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் நான்கு பேரால் பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து டில்லியில் பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
2 / 10
நெல்லை மாவட்டத்தில் விடுபட்ட பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியருக்கு லேப்டாப் கம்ப்யூட்டர்களை வழங்க வலியுறுத்தி மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
3 / 10
கிரானைட் வழக்குகளில், ஜாமின் பெற்ற பி.ஆர்.பி., கிரானைட்ஸ் உரிமையாளர் பழனிச்சாமி, மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் கையெழுத்திட்டார்.
4 / 10
'விருதுநகரில் நடந்த ரேஷன் கடை விற்பனையாளர்கள் நேர்முகதேர்வில், முறைகேடுகள் நடப்பதற்கு ஏதுவாக, பென்சிலை பயன்படுத்தும் கூட்டுறவு அதிகாரிகள்.'
5 / 10
அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர்.
6 / 10
கடலூர் அண்ணா பாலம் அருகே தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் நடந்தது.
7 / 10
தொடர் மின்வெட்டை கண்டித்து, கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
8 / 10
ஊட்டி லோயர்பஜார் நடைபாதையில் இடம் இல்லாததால், வாகனங்கள் செல்லும் சாலையில், விபத்து அபாயத்தை அறியாமல் நடக்கும் பொதுமக்கள்.
9 / 10
ஆனைமலை அருகே மக்கள் சக்தி நகரில் முன் தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில், கொழுந்துவிட்டு எரியும் குடிசைகள்.
10 / 10
திருப்பூர் காங்கயம் ரோட்டில், பள்ளி குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் சென்றதோடு, "பெர்மிட்' இல்லாமல் இயக்கியதற்காக, ஆட்டோவை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
Advertisement