சம்பவம்ஆல்பம்:

24-Dec-2012
1 / 10
தலைநகர் புதுடில்லியில் கற்பழிப்பு சம்பவத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக பைக் பேரணி நடைபெற்றது.
2 / 10
டில்லியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவலியுறுத்தி, பார்லிமென்ட் வளாகம் அருகே, அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தினர் நேற்றுபோராட்டம் நடத்தினர்.
3 / 10
டில்லி, ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விஜய் சவுக் பகுதியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது போலீசார் நேற்றும் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
4 / 10
.டில்லியில், ஓடும் பஸ்சில்,பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ரயில் பவன் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது, போலீசார், தண்ணீரைப் பீய்ச்சி விரட்டியடித்தனர்.
5 / 10
பட்டினபாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
6 / 10
ராமநாதபுரத்தில் மழை இல்லாததால் வெளிநாட்டுப்பறவைகளின் வரத்து குறைந்துவிட்டது. வந்துள்ளவை சாம்பல் நாரைகள் மட்டும் தான். இவையும் இரைதேடும் ”பிசி''''யில் உள்ளன. இடம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகம்.
7 / 10
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த காமன்தொட்டி தென்பெண்ணை ஆற்றில் நீராடிய யானைகள், ஆற்றை கடந்து சானமாவு மலைக்கிராமத்துக்கு சென்றன.வனத்துறையினர் தீ வைத்து யானைகளை விரட்டினர்.
8 / 10
சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு சொந்தமான மாட்டுக்கொட்டகை மின் கசிவு காரணமாக முற்றிலும் எரிந்து சாம்பாலனது.
9 / 10
பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளி தடுப்பணையில், மின் உற்பத்திக்காக தண்ணீர் தேக்கி வைத்திருப்பது காண்பதற்கு கடல்போல் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
10 / 10
பள்ளிபாளையம் அடுத்த ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சமுதாயக்கூடம் அருகே செல்லும் மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில், ஆகாய தாமரை படர்ந்துள்ளதால், தண்ணீர் சீராக செல்ல வழியில்லாமல் தடைபட்டுள்ளது.
Advertisement