சம்பவம்ஆல்பம்:

25-Dec-2012
1 / 10
வெள்ளாமை வீழ்ந்து போச்சு, விளைச்சல் குறைஞ்சு போச்சு, சாவி நெல் மட்டுமே மிச்சம், என காய்ந்த நாற்றை கையில் பிடுங்கி வைத்திருக்கும் விவசாயி வள்ளி.இடம் : கொரட்டி
2 / 10
தலைநகர் டில்லியில் பஸ்சில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் வீட்டை முற்றுகையிட வந்த பெண்கள் , போலீசார் ஏற்படுத்திய தடைகளை விலக்க முற்படுகின்றனர்.
3 / 10
குமுளி மலைப்பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், நேற்று அதிகாலை 3 மணி முதல் காலை 10 மணி வரை, லோயர்கேம்பில் நீண்ட கியூவில் நின்றிருந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள்.
4 / 10
மருத்துவக் கல்லூரி மாணவிக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, டில்லியில், கடந்த ஞாயிறன்று, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதனைக்கருத்தில் கொண்டு, போலீசார், முன்னெச்சரிக்கையாக, போக்குவரத்தில் மாற்றங்களை செய்தனர். இதனால், டில்லியில், ராம் மனோகர் லோகியா மருத்துவமனை அமைந்துள்ள சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
5 / 10
தலைநகர் டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என்ற கோஷங்களுடன், நேற்று ஏராளமான மாணவ மாணவியர் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றனர்.
6 / 10
வறட்சி காரணமாக திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையில் விற்பனைக்காக வந்த மாடுகள்.
7 / 10
திண்டுக்கல் மாவட்டம்,பேரணை அருகே வறண்டு காணப்படும் வைகை ஆறு.
8 / 10
இன்ஜின் கோளாறால், ராமேஸ்வரம்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் அக்காள்மடத்தில் நின்றது.
9 / 10
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ஆம்னி பஸ்சில் மின்கசிவு காரணமாக தீ பிடித்ததில் பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது. தீப்பிடித்ததில் எலும்புக்கூடு போல் காட்சியளிக்கும் ஆம்னி பஸ். அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
10 / 10
ஆழியாறு ஊட்டுக்கால்வாய், மரங்களின் வேர் ஊடுருவியது உட்பட பல்வேறு காரணங்களால் சேதமடைந்துள்ளது.
Advertisement