சம்பவம்ஆல்பம்:

26-Dec-2012
1 / 10
கச்சிராயபாளையம் அருகே கோமுகி ஆற்றில் இருந்து அனுமதியில்லால் மணல் சுரண்டப்படுவது அதிகரித்துள்ளது. இதனால் @காமுகி ஆறு பள்ளத்தாக்கு @பான்று மாறி வருகிறது.
2 / 10
டில்லி மருத்துவ கல்லூரி மாணவி பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் வாள் ஏந்தி போராட்டம் நடத்திய மாணவிகள்.
3 / 10
ஊட்டி-கல்லட்டி சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில், விபத்துகள் ஏற்படாமல் இருக்க பொருத்தப்பட்ட"குவி கண்ணாடிகள்' <உடைக்கப்பட்டுள்ளன.
4 / 10
பொள்ளாச்சியில் நடந்த மாட்டு சந்தைக்கு, மாடுகள் வரத்தின்றி, குறைவாக இருந்தது.
5 / 10
எமரால்டு அணைக்கு தண்ணீர் கொண்டு வரும், முக்கிய நீர்பிடிப்பு பகுதியான போர்த்திஹாடா வறண்டு விடும் சூழ்நிலைக்கு மாறி வருகிறது.
6 / 10
கிழக்கு கடற்கரைச்சாலையில், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன் சென்ற வாகனத்தின் மீது மினி டெம்போ வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இடம் : ஈஞ்சம்பாக்கம்.
7 / 10
மாக்கினாம்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சரிவர தினக்கூலி வழங்குவதில்லை என கூறி, பயனாளிகள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
8 / 10
கருகியது சோளம் மட்டும்தானா? மழை பொய்த்த காரணத்தால், குறைந்தளவு தண்ணீரை கொண்டு வளரும் சோளப்பயிர்களும் காய்ந்து சருகாகி நிற்கிறது. இடம்:அவிநாசி அருகே வஞ்சிபாளையம்.
9 / 10
கல்லல்-ஆலங்குடிஅருகே தனியார் பஸ்மரத்தில் மோதி உருண்டதில் பயணம் செய்த 35 பேர் காயமடைந்தனர்.
10 / 10
மேட்டூர் அடுத்த செங்காட்டூர் கிராமத்தில் விபத்தில், தரை மட்டம் ஆன வாணவெடி ஆலை கட்டட இடிபாடுகளில், தொழிலாளர் கொண்டு வந்த மதிய உணவு சிதறி கிடக்கிறது.
Advertisement