சம்பவம்ஆல்பம்:

28-Dec-2012
1 / 10
மேய்ச்சல் நிலமானது: சிவகங்கை அருகேயுள்ள சாத்தனியில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகியதால்ஆடுகளை விவசாயிகள் மேயவிட்டனர்.
2 / 10
டில்லி மருத்துவ கல்லூரி மாணவி பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் போராட்டம் நடத்திய மாணவிகள்.
3 / 10
கோவை ராமநாதபுரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்ற, பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
4 / 10
சென்னை வடபழனியில், குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மர்மான முறையில் எரிந்து சாம்பலாயின. இதனால், அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
5 / 10
மதுரை ஜெய்ஹிந்துபுரம் மாவு மில்லில் பிடிபட்ட ரேஷன் அரிசி மாவு மூடைகள்.
6 / 10
மதுரை சென்ட்ரல் மார்க்கெட் வந்துள்ள பூசணிக்காய்கள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன.
7 / 10
சென்னையில் கொசு மருந்து அடிக்கும் வாகனங்களை சுற்றி சிறுவர் சிறுமியர் சூழ்ந்து கொள்கின்றனர். கொசு மருந்து புகையை அவர்கள் மிகவும் அருகில் நேரடியாக நுகர்வதால் உயிர்பலி ஆபத்துள்ளது. சமீபத்தில் தண்டையார்பேட்டையில் ஒரு சிறுவன் கொசு மருந்து புகையை நுகர்ந்த போது விபத்து ஏற்பட்டு தீக்காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இடம்: வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்.நகர்.
8 / 10
திருப்புவனம் வைகை ஆற்றில், பொதுப்பணித்துறையின் அனுமதிச்சீட்டு இல்லாமல் மணல் அள்ளிய மாட்டு வண்டிகள்.
9 / 10
டெங்கு அபாயத்தால் பல்வேறு பகுதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட டயர்களை இங்கு குவித்து வைத்தால் மட்டும் டெங்கு வராதா. இடம்: சிவகங்கை மதுரை முக்கு குடிநீர் தொட்டி.
10 / 10
டி.நாகனி கிராமத்தில் தண்ணீர் வராததால், காலிக்குடங்களுடன் பெண்கள், திருவாடானை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
Advertisement