சம்பவம்ஆல்பம்:

09-Jan-2013
1 / 10
மும்பை தானே பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத பொருட்கள் அடங்கிய குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் சாம்பலான பொருட்களை மீட்டனர்.
2 / 10
குஜராத் மாநிலம் சூரத் நகரில் வணிகவளாக கட்டடம் ஒன்று தீப்பிடித்தது. தீயணைப்புபடையினர் தீயை அணைக்கின்றனர்.
3 / 10
மின்வெட்டை கண்டித்து காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் சாலையில் கற்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர்.
4 / 10
கோல்இந்தியா அபியந்தா சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி மேற்குவங்க மாநிலம் ‌கோல்கட்டாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5 / 10
மேற்குவங்க மாநிலம் சீல்தா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருந்த போது பயணிகள் ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
6 / 10
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த நாகமங்கலம் மலைக்கிராமத்தில் புகுந்த யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியதில், வனப்பகுதியில் புழுதி பறக்க அணி வகுத்து சென்ற யானைகள்.
7 / 10
நெல்லையில் நகைக்கடைகளில் கொள்ளையடிக்க பயன்படுத்திய காஸ் சிலிண்டர், வெல்டிங் ராடுகள் உள்ளிட்ட உபகரணங்கள்(உள்படம் ) கைதான கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மகேந்திரா வேன்.
8 / 10
ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள்,தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தனர்
9 / 10
ஈரோடு, சத்தியமங்கலம் அடுத்த திம்பம் நான்காவது கொண்டைஊசி வளைவில், திரும்பும்போது கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
10 / 10
நாமக்கல் அடுத்த நாமகிரிப்பேட்டையில் இருந்து ராசிபுரம் வந்த கார் ஒன்று காக்வேரியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை‌யோரம் உள்ள வீட்டினுள் புகுந்து விபத்திற்குள்ளானது.
Advertisement