சம்பவம்ஆல்பம்:

10-Jan-2013
1 / 10
விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் கம்மாபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற கரும்பு லோடு டிராக்டர் மற்றும் லாரி உரசி நின்றதால் போக்குவரத்து பாதித்தது.
2 / 10
பாகிஸ்தான் வீரர்கள் ஊடுருவிய எல்லைப்பகுதி கம்பி வேலியை சரிப்படுத்தும் முயற்சியில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்.'
3 / 10
கர்நாடக மாநிலம் சிக்மக்ளூரில் 8ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவனை மின் கம்பத்தில் கட்டிவைத்து பொது மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
4 / 10
பாகிஸ்தான் ராணுவத்தினரால் இந்திய வீரர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து டில்லியில் பா.ஜ.வினர் போராட்டம் நடத்தினர்.
5 / 10
மேலூர் அருகே கீழவளவில் ரூ.56 கோடி அபராதம் விதிக்கப் பெற்ற குவாரியில் மழைநீர் நிரம்பியிருந்ததால், அதிகாரிகளால் மீண்டும் அளக்க முடியவில்லை.
6 / 10
சீரான மின் வினியோகம் கோரி, சென்னை தவிர, தமிழகம் முழுவதும் வர்த்தகர்கள், தொழில் துறையினர் சார்பில் நேற்று ”ஸ்டிரைக் நடந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து, திருப்பூரில் அட்டைபெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் நேற்று மூடப்பட்டிருந்தன. பச நடைபெறாமல் வெறிச்சோடியது தொழிற்சாலை.
7 / 10
தூத்துக்குடி அருகே, திடீரென டயர் வெடித்ததால், நடுரோட்டில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ். இவ்விபத்தில், இதிலிருந்த, நால்வர் படுகாயமடைந்தனர்.
8 / 10
காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீரை நேரடியாக கலக்கச் செய்யும், பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகளை, ஈரோடு மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர்.
9 / 10
'ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் கடல் கொந்தளிப்பால், ராட்சத அலைகள், பாம்பன் சாலை பாலம் அருகே கரையோரம் ஆக்ரோஷமாக மோதியது.'
10 / 10
பந்தலூர் அருகே கூலால் இடலச்சேரி பகுதியில், நீரோடையிலிருந்து தனியார் நிலத்துக்கு தண்ணீரை திருப்பி விட, விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள குழாய்.
Advertisement