சம்பவம்ஆல்பம்:

18-Jan-2013
1 / 10
7ம்வகுப்பு மாணவி கொலை வழக்கு விசாரணைக்காக, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட, கூலித்தொழிலாளி சுப்பையா.
2 / 10
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில், பனிப் பொழிவு அதிகமாக உள்ளது. மால் சாலையில் பனிப் பொழிவை அனுபவித்தபடி செல்லும் சுற்றுலாப் பயணிகள்.
3 / 10
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால், கைது செய்யப்பட்ட போலீஸ் எஸ்.பி., ராஜேஷ் மீனா, அஜ்மீர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
4 / 10
பொங்கல் பண்டிகையை கொண்டாட, சொந்த ஊர்களுக்கு சென்ற சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள், நேற்று முதல் சென்னை திரும்பி வருகின்றனர். தாம்பரம் வராமல் அனைத்து பஸ்களும், பை-பாசில் கோயம்பேடு சென்றதால், பெருங்களத்தூர், பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏற அதிக எண்ணிக்கையில் காத்திருந்தனர்.
5 / 10
பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளை ஷூ காலால் உதைத்ததாக, ஆசிரியர் மீது புகார் எழுந்ததை தொடர்ந்து, அப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
6 / 10
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே எருமைகுளத்தில் அரசுக்கு எதிர்ப்புதெரிவிக்கும் வகையில் ரோட்டில் வீசப்பட்ட இலவச பொருள்கள், ஆறு நாட்கள் ஆகியும் கேட்பாரற்று கிடக்கின்றன.
7 / 10
திண்டுக்கல்லில் மகன்களை கொலை செய்த வழக்கில் கைதான தாய் சகாயராணிகோர்ட்டிற்கு போலீசாரால் அழைத்து வரப்பட்டார். '
8 / 10
தேனி மாவட்டம் தாடிச்சேரியை சேர்ந்த பிரியாவை, காதலித்து திருமணம் செய்துவிட்டு இரண்டே நாளில் ராணுவ வீரர் வீரமருது மாயமானதால், தேனி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோருடன் புகார் கொடுக்க வந்தார்.'
9 / 10
தேனியில் 'வெட்டப்பட்ட கேபிள் டிவி தாசில்தார் முருகேசனை, மேல் சிகிச்சைக்கு மதுரை கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சில் ஏற்றினர்.'
10 / 10
விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அடுத்துள்ள வீரசோழபுரம் அருகே உள்ள பூனைக்கண் ஓடைவழியே தரணி சர்க்கரை ஆலையின் நச்சுக்கழிவு மணிமுக்தா ஆற்றில் வந்து கலப்பதை அப்பகுதி விவசாயி சுட்டிக்காட்டுகிறார்.
Advertisement