சம்பவம்ஆல்பம்:

20-Jan-2013
1 / 10
சென்னை வில்லிவாக்கம் ரெட்டி சாலையில் அ.தி.மு.க.,வின் பொதுக் கூட்டத்திற்காக பேருந்துகள் வந்து செல்லும் பிரதான சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்து மேடை அமைத்தனர். இதனால் அருகில் உள்ள சந்துகளில் பேருந்துகள் கண்டபடி சென்றதால், அவ்வழியே செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
2 / 10
மூணாறு அருகே மாட்டுப்பட்டி அணையின் கரையோரத்தில்,காட்டு யானையின் வலது தந்தத்தில் சிக்கிய பிளாஸ்டிக் குழாய்.'
3 / 10
திருப்பூர், நெருப்பெரிச்சல் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க, நிரந்தர பணியாளர் நியமிக்காததை கண்டித்தும், இலவச பொங்கல் பொருட்களை முறையாக வழங்காததை கண்டித்தும், பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4 / 10
திருப்பூர், கே.செட்டிபாளையம் பாரதி நகரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீர் வீணாகி வருகிறது; அக்குடிநீரை குடத்தில் நிரப்பும் பெண்.
5 / 10
' ராமநாதபுரம், கமுதி அருகே எருமைகுளத்தில் கண்மாய் பிரச்னையில், அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமத்தினர்.
6 / 10
மினி பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.
7 / 10
' ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்புல் நாயக்கன்பட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சோள கதிர்கள் கருகின.
8 / 10
' விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், கிணற்றில் இறங்கி,போலீசாருக்கு போக்கு காட்டிய,மதுரை யாகப்பா நகரை சேர்ந்த உமல்பேகம்.'
9 / 10
புழக்கத்தில் விட முயன்ற ஐந்து லட்ச ரூபாய் கள்ளநோட்டுகளை, கொடுங்கையூர் போலீசார் வியாசர்பாடியில் பறிமுதல் செய்தனர். கள்ளநோட்டுகளை ஆய்வு செய்யும் போலீசார்.
10 / 10
மதுரை - பரவை ரோட்டில் விபத்துக்குள்ளான வேன் உருக்குலைந்து கிடக்கிறது.
Advertisement