சம்பவம்ஆல்பம்:

30-Jan-2013
1 / 15
'ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் பெண்கள் மூலம் திருடப்படும் மணல், தலைச்சுமையாக வரப்படுகிறது.
2 / 15
டில்லி மருத்துவ கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரையும் தூக்கிலிட வலியுறுத்தி பார்லிமென்ட் அருகே மக்கள் போராட்டம் நடத்தினர்.
3 / 15
சேலம் மாவட்டம், ஜலகண்டபுரத்தை சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகர் பழனிச்சாமி, கம்யூ., பிரமுகர் பழனிச்சாமி ஆகியோரின் மொபட்களுக்கு ஒரே பதிவு எண் வழங்கப்பட்டுள்ளது.
4 / 15
பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மாதிரி வினா விடைத்தாள் புத்தகம் வாங்குவதற்காக, சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில் குவிந்த பெற்றோர்கள்.
5 / 15
'தேவிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவரை, மீண்டும் பள்ளியில் சேர்க்க கோரி, ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்.'
6 / 15
'தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு லாரியில் கொண்டு செல்லும்போது, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட அடிமாடுகள்.'
7 / 15
சேலம் சுடுகாட்டில் பிணம் புதைக்க அனுமதி மறுக்கபட்டதால், இறந்தவரின் உறவினர்கள், சமூகத்தினர் பின வாகனம் முன் அமந்து போராட்டம் நடத்தினர்.
8 / 15
அடிப்படை வசதியும் இல்லை... ஆசிரியரும் இல்லை தற்போது லேப்டாப்பும் இல்லை அதனாலத்தான் போரட்ட களத்தில் இறங்கிட்டோம். புரசைவாக்கத்தில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் செய்யும் மாணவர்கள்.
9 / 15
தமிழக-கேரள எல்லையில் புளியரை அருகே விபத்துக்குள்ளாகி கிடக்கும் சிமெண்ட், மரம் ஏற்றிய லாரிகள்.
10 / 15
கூடலூரில் இருந்து பந்தலூர் பகுதிக்கு மாலை நேரத்தில் போதிய பஸ் இல்லாததால், மாணவர்கள் படிக்கெட்டில் ஆபத்தான முறையில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர்.
11 / 15
கோவை அருகே, துடியலூரில் இருந்து இடிகரை செல்லும் வழியில் செங்காளிபாளையம் அருகே காலி பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி திடீரென கவிழ்ந்தது.
12 / 15
ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் சுடுகாட்டில், நகராட்சியினரால் கொட்டப்படும் குப்பையை எரிப்பதால் எழும் புகை, அப்பகுதியினரை திணறடிக்கிறது.
13 / 15
ராமநாதபுரத்தில் 20 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
14 / 15
கோத்தகிரியில், பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்த மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாககூறி, மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.
15 / 15
'விருதுநகர் அருகே மீசலூர் கண்மாய், நூறு நாள் வேலை திட்டத்தில் ஆழப்படுத்தப்பட்டாதாக கூறி தோண்டப்பட்ட மண்ணை, அங்கேயே கொட்டி வைத்துள்ளனர். '
Advertisement