சம்பவம்ஆல்பம்:

31-Jan-2013
1 / 16
மதுரையில்,விஸ்வரூபம் படம் திரையிட இருந்த தங்கரீகல் தியேட்டர்முன், தடைமீறி நுழைந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
2 / 16
'ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டு அருகேயுள்ள தியேட்டரில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் கண்ணாடி சேதமடைந்தது.
3 / 16
கமல்ஹாசன் நடித்த, சுவிஸ்வரூபம் திரைப்படம் வழக்கு விசாரணை, தடை நீடிப்பு என, பல்வேறு சர்ச்சையில் சிக்கி தவித்து வரும் நிலையில், சென்னையில் திரையரங்கங்கள், சில மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உட்பட்டன.
4 / 16
'பனி சூ'ழ்ந்த பழநிமலை:கடந்த சில நாட்களாக பழநியில் பனி அதிகமாகியுள்ளது. காலை 10மணிவரை குளிரின் தாக்கம் உள்ளது.
5 / 16
'ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டு அருகேயுள்ள தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசியதில் சேதமடைந்த கண்ணாடி துகளை எஸ்.பி., மயில் வாகனன் சோதனை செய்தார்.'
6 / 16
'ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் மேட்டுக்காரான் கிராமத்திற்கு செல்லும் ரோடு சேதமடைந்து 20 ஆண்டுகளாகி விட்டது. 15 ஆண்டுகளாக அரசு பஸ் நிறுத்தப்பட்டுள்ளதால் நடந்தே செல்லும் கிராம மக்கள்.'
7 / 16
'தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் வி.ஏ.ஓ., லஞ்சம் வாங்கியதால், அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதால் பொதுமக்கள் அப்பகுதியில் கூடினர்.'
8 / 16
'தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் தி.மு.க., கோஷ்டி மோதல் முன் விரோதத்தில்,மண்டை உடைக்கப்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் ஒன்றிய செயலாளர் சேகர்.'
9 / 16
'ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டு அருகேயுள்ள தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய இடத்தை எஸ்.பி., மயில்வாகனன் பார்வையிட்டார்.'
10 / 16
'திருப்புவனம் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புதிய ஏற்பாடு.'
11 / 16
தாம்பரம் ஜி.எஸ்.டி.,சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டாடா மேஜிக் ஆட்டோ திடீரென்று எரிந்ததால் அந்த பகுதியே மிகவும் பரபரப்புக்குள்ளாகியது இதனால் ஜிஎஸ்.டி.,சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தன.
12 / 16
நடுவீரப்பட்டு - பாலூர் ரோட்டில் விவசாயிகள் வைக்கோல் போர் போட்டு வைத்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
13 / 16
அன்னூர் அருகே காளக்குறிச்சியில், மழை இல்லாததாலும், நிலத்தடி நீர் மட்டம் மிகவும் கீழே சென்று விட்டதாலும், கரும்பு பயிர் கருகி விட்டது.
14 / 16
பொள்ளாச்சி தாலுகாவில், கடும் வெயில் வாட்டி வதைப்பதால், நீர்நிலைகள் வறண்டு போயுள்ளன. இதனால், மக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டியில், ஊற்று நீரை பாத்திரத்தில் பிடித்து சிறிது, சிறிதாக சேகரித்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
15 / 16
ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவியர், தங்களுக்கும் லேப்-டாப் வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
16 / 16
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில், மின் வெட்டை கண்டித்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement