சம்பவம்ஆல்பம்:

01-Feb-2013
1 / 13
சேலம் வன உயிரியல் பூங்காவில் பெண் வன ஊழியரை காலால் மிதித்து கொன்ற பெண் யானை ஆண்டாள் ஆத்திரம் அடங்காமல் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது.
2 / 13
உத்தர்கண்ட் மாநிலம் ஹரிதுவாரில், நடிகர் கமலின் விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதித்த தமிழக அரசை கண்டித்து கமல் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 / 13
கோவை, அவிநாசி ரோடு, உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் மதியம், பேட்டரிகளை ஏற்றி சென்ற வேன், கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புசுவரை உடைத்து கீழே விழுந்தது. இவ்விபத்தில், வேன் ஓட்டுனர் லேசான காயங்களுடன் தப்பினார். இதனால், கோவை மாநகரில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 / 13
விருதுநகர் மாவட்டம் முத்துலிங்காபுரம் கட்டனார்பட்டி, ரவீந்திரா பயர் ஓர்க்ஸ் பட்டாசு ஆலையில் நடந்த விபத்தை, எக்ஸ்பிளோசிவ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
5 / 13
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் கார்பைடு கல் வெடித்து தரைமட்டமான வாழைப்பழ குடோனில், தடய அறிவியல் நிபுணர் சண்முகம் ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்தார்.
6 / 13
இது எங்க ஏரியா உள்ளே வாங்க: சஆவியாசசர்பாடி சசரகத்தில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகளை கண்டித்து, பகுதி மக்கள் போலீசசாரை கண்டித்து சசாலை மறியலில் ஈடுபட்டனர். சசரியாக ரோந்து வராத காவல்நிலைய ஆய்வாளரை சூழ்ந்து கொண்டு சசரமாரி கேள்வி எழுப்பிய பெண்கள்.
7 / 13
விவசாயப்பணிக்காக இப்படி பாரம் சுமந்து சென்றாலும். அளவுக்கு அதிகமாக இருந்தால் அதுவும் ஆபத்து தான். இடம்: பொள்ளாச்சி - நெகமம் ரோடு.
8 / 13
பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆண்கள் கழிப்பிடம் பராமரிப்பில்லாததால், சுகாதாரமின்றி காணப்படுகிறது. இதனால், பயணிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்உள்ளது.
9 / 13
அரசு விழா என்றாலே காலதாமதமாகத்தான் துவங்கும் என்பதை உடுமலை அரசு கலைக்கல்லூரியில் நடந்த விழா உறுதிப்படுத்தியது. இதனால் காலியாக கிடக்கும் விழா மேடை. காலை 9.00 மணி முதல் பல மணி நேரம் காத்திருந்த மாணவிகள்.
10 / 13
மாக்கினாம்பட்டி - சூளேஸ்வரன்பட்டி செல்லும் வழித்தடத்தில் பொதுக்குழாயில் காலி குடங்களுடன் காத்துகிடக்கும் பெண்.
11 / 13
போதிய பருவமழையில்லாமல், மக்காச்சோளம் காய்ந்து வந்தது. இதனையடுத்து, விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள கதிர்களை அறுவடை செய்து கால்நடைகளுக்கு உணவாக்கி வருகின்றனர். இடம்: எஸ்.வி., புரம்.
12 / 13
"இருட்டு' குடை: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் நுழைவுப் பகுதியில் உள்ள நிழற்குடையில், டியூப்லைட்கள் கண்மூடிவிட்டன. இரவில் இருட்டில் நிற்கும் பயணிகளுக்கு, முக்கியமாக பெண்களுக்கு எதுவும் நிகழும் அபாயம் நீடிக்கிறது.
13 / 13
மானகிரி - தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், கல்லல் பகுதிக்கு குடிநீர் செல்லும் குழாய் உடைந்து, குடிநீர் வீணாகிறது.
Advertisement