சம்பவம்ஆல்பம்:

07-Feb-2013
1 / 16
கோவிலில் ஏற்றியுள்ள அணையா தீபத்தின் சுடர் நீண்டு எரிவதை போன்று தோன்றிய அபூர்வ காட்சி.
2 / 16
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் ரசாயன குடோன் ஒன்றில் திடீரென்று தீப்பிடித்தது.
3 / 16
கடும் பனி பொழிவினால் விருத்தாசலம் பகுதியில் முந்திரி பூக்கள் கருகும் நிலையில் உள்ளன.
4 / 16
திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவ பணிகள் பாதிக்காத வகையில் போராட்டம் செய்தனர்.
5 / 16
திண்டுக்கல் மாவட்டம், புகையிலைப்பட்டியில் நடந்த ஜல்லிகட்டில் அடக்க வந்தவரை தூக்கி வீசும் காளை.
6 / 16
போக்குவரத்து விதியை மதிக்காத கட்சி முக்கியஸ்தர்கள். நாங்கள் ஆளும் கட்சியில்ல நம்பர் பிளேட்ல என்ன வேனும்னாலும் எழுதுவோம். எங்களுக்கு போக்குவரத்து விதி எல்லாம் கிடையாது. சட்டசபைக்கு வந்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ., வோட கார்தாங்க.
7 / 16
விழுப்புரத்தில் சொத்துவரி மற்றும் குடிநீர் வரி பாக்கி வைத்துள்ளவரின் வீட்டிற்கான குடிநீர் இணைப்பை நகராட்சி ஊழியர்கள் துண்டித்தனர்.
8 / 16
கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சியில் அரசு இடம் ஆக்கிரமிப்பு, ஐகோர்ட் உத்தரவுப்படி அகற்றப்பட்டது.
9 / 16
வெறுமை: பறவைகள் சரணாலயமான ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாய் தண்ணீரின்றி, வறண்டு காணப்படுகிறது.
10 / 16
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ராயர்பாளையத்தில் உள்ள நூற்பாலை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், பஞ்சு பேல்கள் எரிந்து நாசமாகின.
11 / 16
தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எழும்பூர், ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து பேரணியாக சென்றனர்.
12 / 16
விருத்தாசலம் பெண்ணாடம் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உலர வைக்கப்பட்டுள்ள உளுந்துச்செடிகள்.
13 / 16
கோவை ஆலாந்துறை அருகே நாதேகவுண்டர் புதூரில், அளவுக்கு அதிகமான கரும்புகளை ஏற்றி சென்ற லாரி நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இவ்விபத்தில், லாரி டிரைவர் உள்ளிட்ட தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர்.
14 / 16
சின்னசேலம் அருகே தெங்கியாநத்தம் கிராமத்தில் நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
15 / 16
'பருவ மழை பொய்த்ததால் திண்டுக்கல், பழநி சட்டப்பாறை பகுதியில் சூரியகாந்தி செடிகள் கருகி வருகின.'
16 / 16
மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றில் மூழ்கி, இரண்டு வாலிபர்கள் பலியாகினர். சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.
Advertisement