சம்பவம்ஆல்பம்:

08-Feb-2013
1 / 16
சென்னை எழுப்பூரில் காசா மேஜர் 2 வது அவன்யு வில் உள்ள இலங்கை வங்கியினை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்வங்கியை தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர். இலங்கை வங்கிக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2 / 16
கேரள மாநிலம் சூர்யநெல்லி பாலியல் பலாத்கார வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி திருவனந்தபுரம் சட்டசபை முன்பாக அனைந்திந்திய ஜனநாயக பெண்கள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்ற பெண் போலீசார்.
3 / 16
தூத்துக்குடியில், பறிமுதல் செய்யப்பட்ட, விஸ்வரூபம் உள்ளிட்ட, புதுப்பட திருட்டு "விசிடி'க்கள்.
4 / 16
திருப்பதிக்கு வரும் ராஜபக்ஷேவை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருவதால், சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
5 / 16
மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானைகளால், சேதப்படுத்தப்பட்ட வாழை மரங்கள்.
6 / 16
ராயப்பேட்டை, புதுக் கல்லூரி மாணவர்கள், பஸ் டே என்ற பெயரில், பஸ்சில் வந்த பயணிகளை இறக்கி விட்டு, அராஜகத்தில் ஈடுபட்டனர்.
7 / 16
'ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடலோரப்பகுதியில், தூத்துக்குடி மீனவர்கள் விசைப்படகில் அத்துமீறி மீன்பிடித்து வருகின்றனர்.'
8 / 16
திருத்தணி அடுத்த ராமஞ்சேரியில் நடந்த வாகன விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை கேள்விப்பட்ட, பள்ளி மாணவ, மாணவியர் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
9 / 16
கன்னியாகுமரி கடலில் நான்கு நாட்களாக தத்தளித்து, இலங்கை மீனவர்களால் காப்பாற்றப்பட்டு, மதுரை வந்த மீனவர்கள் (இடமிருந்து) அமல்ராஜ், சேவியர், ஜோய்.
10 / 16
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சியில் தனியார் நிலத்தில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் அரசு அதிகாரிகள் தவறால் கட்டப்பட்ட வீடுகளில் இருந்து, பொருட்களுடன் வெளியேற்றப்பட்ட குடும்பத்தினர்.
11 / 16
கிள்ளை அடுத்த கீழ் அனுவம்பட்டு கிராமத்தில் புதியதாக திறக்கப்பட்ட ரேஷன் கடை இயங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 / 16
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து இறங்கிய யானைகள், வாழைத்தோட்டங்களை சேதப்படுத்தின.
13 / 16
ஊட்டி நகராட்சியின் கவுன்சிலரை கண்டித்து, துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
14 / 16
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அடுத்த வேடல் அருகே, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்.
15 / 16
மும்பை, சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் அருகே, அதிகாலை, மேம்பாலம் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த போது, திடீரென இடிந்து விழுந்ததில், மூன்று பேர் இறந்தனர், ஆறு பேர், படுகாயமடைந்தனர். இடிபாடுகளில் வேறு யாராவது சிக்கியுள்ளனரா என்று தேடும் பணியில், மீட்பு பணியாளர்கள்.
16 / 16
இமாச்சல பிரதேசம், கின்னுர் மாவட்டத்தில், ஏற்பட்ட பனிச் சரிவில், பனியில் புதைந்த, ஏழு பேர் மீட்கப்பட்டனர். பனி குவியலில் சிக்கியவர்களை, மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்.
Advertisement