சம்பவம்ஆல்பம்:

21-Feb-2013
1 / 17
விலைவாசி உயர்வு உள்ளிட்ட, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அண்ணாசாலையில், சாலை மறியலில் ஈடுபட்டதொழிற் சங்கத்தினர்.
2 / 17
மத்திய அரசை கண்டித்து, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடந்தது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில், தடையை மீறி வந்த தனியார் கல்லூரி பஸ் டிரைவரை தாக்க, தடியுடன் பாயும் பெண்.
3 / 17
பீகார் மாநிலம் பாட்னாவில் இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க ஆதரவாளர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
4 / 17
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூவின் டில்லி வீட்டின் முன்பாக சமூக அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 / 17
உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் பாரத் பந்த் வேலைநிறுத்த போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன.
6 / 17
சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையம் எதிரே உள்ள சிவன் கோயில் மேற்கு சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வினாயகர் கோவிலை, கோர்ட் உத்தரவு படி மாநகராட்சியினர் இடித்து தரைமட்டமாக்கினர்.
7 / 17
இலங்கையில் நடந்த பிரபாகரனின் மகன் பாலசந்திரன் கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியான சம்பவத்தால், இரவு சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது மர்ம நபர்களால் சிலரால் தாக்குதல் நடந்தது. இதனால், பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளன.
8 / 17
கூடலூர் ஓவேலி சுண்டி ஆற்றில் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துள்ளதால், வன உயிரினங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .
9 / 17
பொள்ளாச்சியில் ,மாட்டுவியாபாரிகள் "ஸ்டிரைக்'கால், சந்தை நாளான நேற்று, மாடுகளும் இல்லாமல் "வெறிச்'சோடி காணப் பட்ட சந்தை.
10 / 17
உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், அணைப்பகுதி நீரின்றி பாலைவனமாக காட்சியளிக்கிறது.
11 / 17
மாவட்ட கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரி, திருவள்ளூர் மாவட்டம் சின்னநாகபூண்டி பொதுமக்கள் சோளிங்கர்-சித்தூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 / 17
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருமுக்குளத்தில் தண்ணீரின்றி வறண்ட நிலையில் உள்ளதால் மாசி தெப்ப திருவிழா நடத்த முடியாத நிலை உள்ளது.
13 / 17
விருதுநகர் மாவட்டம்,சிவகாசி நேரு காலனி மக்களால் சிறைபிடிக்கப்பட்ட போலி டாக்டர்கள் சம்பத், இளங்கன்னி.
14 / 17
அகில் இந்திய பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து எல்.ஐ.சி., கிளை-1 முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
15 / 17
கோவை அருகேஉள்ள தொண்டாமுத்தூரில் மழை இல்லாமல் வாடிய நிலையில் வாழை.
16 / 17
நாகாலாந்து மாநிலத்தில், வரும் 23ம் தேதி, தேர்தல் நடக்கவுள்ள நிலையில், திம்பூர் மாவட்டத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில், ஒருவர் கொல்லப்பட்டார்; மற்றொ ருவர் காயமடைந்துள்ளார். விபத்தில் இறந்தவரை, வாகனத்தில் ஏற்றும் போலீசார்.
17 / 17
தனி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்று கைதான பெண் ,போலீஸ்ஸ்டேசனில் இருந்து தப்பி சென்ற போது, பெண் எஸ்.ஐ., பிடித்து அழைத்து வந்தார்.
Advertisement