சம்பவம்ஆல்பம்:

22-Feb-2013
1 / 15
தாம்பரத்தில் வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து குற்றவாளிகளை உடனே கைது செய்யவலியுறுத்தி தாம்பரம் கோர்ட் எதிரே ஜி.எஸ்.டி.,சாலையை மறித்து வக்கீல்கள் சாலை மறியல் செய்தனர் .
2 / 15
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் அந்த வழியாக சென்ற வாகனத்தின் உள்ளே பயணிகள் இருப்பதையும், அவர்கள் காயமடைவார்கள் என்பதை கொஞ்சமும் உணராமல் தடியால் தாக்கி கண்ணாடியை உடைத்தார்.
3 / 15
அசாம் மாநிலம் கவுகாத்திக்கு அருகே மதுப்பு வனப்பகுதியில் கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை குழாய் ஒன்றினை பற்றிக் கொண்டு மேலே ஏறி வர முயற்சித்தது.
4 / 15
பெண் வன்கொடுமைக்கு எதிரான சட்ட தண்டனைகள் போதுமானதாக இல்லை என கூறி பெண்கள் அமைப்பினர் டில்லி பார்லிமென்ட் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 / 15
காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஜம்மு பகுதியை பிரிந்து தனி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜம்முவில் சிவ சேனா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 / 15
ஐதராபாத் தில்சுக் நகரில் நடந்த குண்டு வெடிப்பில், சேதமடைந்துள்ள கடைகள்.
7 / 15
மத்திய அரசை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் செய்தனர்.
8 / 15
குரோம்பேட்டை கக்கிளாஞ்சாவடியில் காஸ் சிலிண்டர் வெடித்து 3 குடிசை வீடுகள் எரிந்து போயின.
9 / 15
சென்னை ராயப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பயனற்றுப் போகும் நிலையில் குவியலாக வைக்கப்பட்டுள்ளது.
10 / 15
சென்னை ராயப்பேட்டை காவல் நிலையம் எதிரே உள்ள பேருந்து நிறுத்த பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் பயணிகள் அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
11 / 15
திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவப்பட்டி தாய் முகாம்பிகை நகரில், வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது, அருகே இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் குழிக்குள் புதையுண்ட பெண்ணை, தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
12 / 15
கடந்த ஆண்டு மழை பொய்த்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் தற்போது நீர் மட்டம் குறைவாகவே உள்ளது.
13 / 15
கூடலூர் நகராட்சி வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சிஊழியர்கள் "சீல்' வைத்தனர்.
14 / 15
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சாலை பாலத்தில் பொருத்தப்பட்ட, நகரும் இரும்பு சாரம், சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்து, , பாலத்தின் நடுப்பகுதி அருகே கொண்டு வரப்பட்டது.
15 / 15
கல்லூரியில் மாணவன் விஷம் குடித்ததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
Advertisement