சம்பவம்ஆல்பம்:

05-Mar-2013
1 / 11
சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள, அரசு பொது மருத்துவமனையிலிருந்து வந்து செல்லும் நோயாளிகள், சுரங்கப்பாதையை பயன்படுத்தாமல், சாலையை கடப்பதால் நடு ரோட்டில், பஸ்கள் நின்று விடுகின்றன. இதனால், பஸ் நிறுத்தத்திற்கு செல்லாமல் நடு ரோட்டிலேயே பலர், பஸ்சை மறித்து ஏறுகின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
2 / 11
அட... ஆச்சரியப்படாதீங்க... பஸ்சுக்குள்ள குடிநீர் குழாய் இல்லீங்க... சேலம் - புதுச்சேரி செல்லும் அரசு விரைவு டப்பா பஸ்சுல பட்டை உடைந்து டீசல் டேங்க் ஓட்டையாகி டீசல் ஒழுகியதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் குடங்களை வாங்கி டீசல்தாங்க பிடிக்கறாங்க. இடம்: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி.
3 / 11
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இர்ரோம் ஷர்மிளா, ஆயுதப்படையினருக்கான விசேஷ சலுகை சட்டத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 12 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அவர் மீது தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டில்லி கோர்ட்டில் ஆஜராகிவிட்டு திரும்பும் ஷர்மிளா.
4 / 11
தூக்கலிடப்பட்ட டில்லி பார்லிமென்ட் தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி அப்சல் குருவின் உடலை ஒப்படைக்க கோரி காஷ்மீர் போராட்டத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தினை கலைக்க ராணுவத்தினர் வீசிய கண்ணீர் புகைக்குண்டு திருப்பி வீசும் போராட்டக்காரர்.
5 / 11
உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் ஆக்ரமிப்புகளை அகற்றும் பணியின் போது மின்சார தூண் சாய்ந்து வழிபோக்கர் ஒருவருக்கு காயமடைந்தது. இதையடுத்து கிரேன் ஓட்டுனரை தாக்கிய பொதுமக்கள்.
6 / 11
திருவண்ணாமலை அடுத்த வடமாத்தூர் கிராமத்தில், மின் கம்பத்தில் இருந்து ஒரு ஒயர் அறுந்து கிடந்தது. இதில், தெரியாமல் கால் வைத்த தம்பதியர் பலியாகினர்.
7 / 11
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், மகா சிவராத்திரி விழாவையொட்டி சுவாமி, அம்மன் புறப்பாடு தாமதம் ஆகியதால், வாக்குவாதம் செய்த கோயில் சீர்பாதம் தூக்கும் தொழிலாளிகளை, சமரசம் செய்த கோயில் அதிகாரி.
8 / 11
பஞ்சாப் மாநிலம் டரன்டரன் பகுதியில் பாலியல் பலாத்கார வழக்கு கொடுக்க வந்த பெண்ணை போலீசார் அடித்து துன்புறுத்தினர். இதையடுத்து 4 போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
9 / 11
தேசிய மீனவர் பேரவை' என்ற தமிழக அமைப்பினர், இளங்கோ என்பவர் தலைமையில், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டித்து, டில்லி, ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
10 / 11
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பின்புறம் ரோட்டில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்பற்காக தடுப்பு நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. லாரியில் வந்தவர் அதனை திறந்து செல்கிறார். உள்படம்: தடுப்பு கம்பி அகற்றப்படுகிறது.
11 / 11
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் கைது செய்யப் பட்ட, ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி, மன்சூர் இமாம், ராஞ்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான்.