சம்பவம்ஆல்பம்:

19-Mar-2013
1 / 10
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள்.
2 / 10
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற்ற மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பா.ஜ. இளைஞர் அமைப்பினர்.
3 / 10
தொல்லியல் துறை சார்பில், தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு, ஆராய்ச்சி படிப்புக்கென அழைத்து வரப்பட்ட இலங்கை மாணவர் கனலேகா மீது, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழ்தேசப் பொதுவுடமை கட்சியினரும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
4 / 10
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்ககோரி உண்ணாவிரதம் இருந்த விருதுநகர் காமராஜ் இன்ஜி., கல்லூரி மாணவிகள்.
5 / 10
நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட, குமரி மீனவர்களின் நான்கு விசைப்படகுகள், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன.
6 / 10
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாரியூரில் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசு.
7 / 10
கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற போது செல்லங்குப்பத்தில் விபத்துக்குள்ளான தீயணைப்பு வாகனம்.
8 / 10
வியாசர்பாடி, கொடுங்கையூர் மற்றும் பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது. நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி உருப்படியான நடவடிக்கை எடுக்காத நிலையில், மக்கள் நாய்கடி பீதியுடனேயே சாலையில் வலம் வருகின்றனர். இடம்: வியாசர்பாடி எம்.ஜி.ஆர்.நகர்.
9 / 10
இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்து நாமக்கல் செல்வம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 / 10
தங்களது குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க காலிக்குடங்களை எடுத்து வந்த பெரியப்பட்டி எம்.ஜி.ஆர்., நகர் பொதுமக்கள்.
Advertisement