சம்பவம்ஆல்பம்:

22-Mar-2013
1 / 10
வரும், 2013-2014 ம் நிதியாண்டுக்கான, தமிழக பட்ஜெட் கூட்டத் தொடருக்கு வந்த இந்திய கம்யுனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள், இலங்கைக்கு ஆதரவாக மத்திய அரசு செயல் படுவதாக கூறி, கையில் பதாகைகளுடன், கோஷம் இட்டபடி சட்டசபைக்கு உள்ளே சென்றனர்.
2 / 10
ஐதராபாத்தில் தனி தெலுங்கானா மாநிலம் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
3 / 10
புதுச்சேரியில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, நடந்த போராட்டத்தின் போது, பெரியார் திராவிடர் கழகத்தினர், அரவிந்தர் ஆசிரமத்திற்குள் புகுந்து, கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.
4 / 10
நாகை மாவட்டம், சின்னங்குடி கிராம மீனவர்கள், இலங்கை பிரச்னைக்காகவும் , இலங்கை கடற்படையினரை கண்டித்தும் கடலில் படகில் இருந்தவாறு தொடர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
5 / 10
இருசக்கர வாகனத்தில் அதிகமாக லோடு ஏற்றி சென்ற விளைவுதான் இந்த விபத்து.இடம் :கோவை கலெக்டர் அலுவலகம்.
6 / 10
தேனி மாவட்டம் டி.ரங்கநாதபுரத்தில்,கிராம மக்களால் வெட்டி சாய்க்கப்பட்ட காங்., கொடிக்கம்பத்தை, போலீஸ்காரர் ஒருவர் தூக்கிச் சென்றார்.
7 / 10
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே, அதிகாலை, அடுத்தடுத்து மூன்று கடைகளில், தொடர்கொள்ளை நடந்தது. கடையிலிருந்த சி.சி., டிவியில், பதிவாயிருந்த கொள்ளையர்கள் வந்து சென்ற காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்தனர்.
8 / 10
இலங்கையில், தனி தமிழ் ஈழம் அமைக்கக்கோரி, தூத்துக்குடி, ராம்தாஸ் நகர் முகாமில், இலங்கை அகதிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
9 / 10
சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள, தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் திடீரென, சி.பி.ஐ. சோதனை நடந்தது. இதைக் கேள்விப்பட்டு ஸ்டாலின் வீட்டின் முன் திரண்ட தொண்டர்கள்.
10 / 10
கூடலூர் நகராட்சிக்கு குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை நகராட்சி ஊழியர்கள் துண்டித்தனர்.
Advertisement