சம்பவம்ஆல்பம்:

02-May-2013
1 / 10
தூத்துக்குடி அருகே, இடிந்துவிழுந்த, அரசு பள்ளி சமையலறை கட்டட, சிமின்ட் சிலாப்.
2 / 10
காஷ்மீர் மாநிலம், ஜம்முவில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில், மருத்துவமனை ஒன்றின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.
3 / 10
புதுச்சேரி - கடலூர் சாலையிலுள்ள பூராணங்குப்பத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பா.ம.க.,வினர் நடத்திய சாலை மறியல் போராட்டம் காரணமாக, போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
4 / 10
புதுச்சேரியை அடுத்துள்ள பூரணாங்குப்பத்தில் போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தும் வகையில் பா.ம.க.,வினர் போட்டிருந்த, சிமெண்ட் தூணை, போலீசார் அப்புறப்படுத்தினர்.
5 / 10
விழுப்புரம் மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்தூர் அரசு டாஸ்மாக் கடை எண் 11704 ல் நேற்று முன்தினம் நள்ளிரவு விஷமிகள் தீவைத்துக்கொளுத்தியதால் எரிந்து கிடக்கும் சரக்கு பாட்டில்கள்.
6 / 10
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே டிப்பர் லாரி மோதியதில் சேதமடைந்த காஸ் டேங்கரிலிருந்து காஸ் வெளியேறியபோது, தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை அடித்து அணைத்தனர்.
7 / 10
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையத்தில் கூரைகொட்டகை தீ வைத்து கொளுத்தப்பட்டது.
8 / 10
ராமதாஸ் கைதையொட்டி கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பஸ் கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் நடைபெற்றதால் கிராமங்களுக்குச் செல்லும் அரசு டவுன் பஸ்கள் அரசு பணிமணையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
9 / 10
புரதான சின்னமான, மாமல்லபுரம் கடற்கரைக்கோவில் உச்சியில், தங்கள் சங்க கொடியை ஏற்றிய கும்பல்.
10 / 10
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் பகுதியில் சூறாவளி காற்றால் சாய்ந்த வாழை மரங்கள்.