உலகம் ஆல்பம்:

22-அக்-2018
1 / 7
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எல்கோ விமானநிலையம் வந்தார். உடன் அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர் டீன் கெல்லர் மற்றும் அவரது மனைவி.
2 / 7
துனிஷ்ய அதிபர் பேஜி கெய்ட் எசப்ஸி (வலது) மற்றும் பாலஸ்தீன அரசியல் பெண் பிரமுகர் அகெத் தமிமி (இடது) இருவரும் துனிஸ் நகரிலுள்ள அதிபர் மாளிகையில் சந்தித்தனர்.
3 / 7
இத்தாலிய துணை பிரதமர் லுகி டி மயோ (இடது) மற்றும் பிரதமர் க்யூசெப்பே கொன்டே (வலது) இருவரும் தலைநகர் ரோமில் நடந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
4 / 7
இத்தாலியின் பைவ் ஸ்டார் இயக்க தலைவர் பெப்பே கிரில்லோ தலைநகர் ரோமில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார்.
5 / 7
போலந்தின் வலது சாரி ஆளுங்கட்சி தலைவர் ஜரோஸ்லா காசின்கி வார்ஷாவில் நடந்த தேர்தலின் போது தனது ஓட்டினை பதிவு செய்தார்.
6 / 7
ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மிக்கைல் கோப்பர்செவ் தலைநகர் மாஸ்கோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
7 / 7
துருக்கி அதிபர் ரெசிப்தயீப் எர்தோகன் (வலது) மற்றும் கம்போடிய பிரதமர் குன்சென் இருவரும் துருக்கியின் இஸ்தான்பூலில் சந்தித்தனர்.