உலகம் ஆல்பம்:

19-Jun-2012
1 / 10
ஜி -20 மாநாட்டிற்காக மெக்ஸிகோ சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அங்கு பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா தலைவர்களுக்கிடையேயான பிரிக் மாநாட்டில் கலந்துகொண்டார். அருகில் மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா.
2 / 10
மெக்ஸிகோவின் லாஸ் கபோசில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் உரையாற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்.
3 / 10
மெக்ஸிகோவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டிற்காக, லாஸ் கபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.
4 / 10
அமெரிக்காவின் ஓரேகான் பல்கலைக்கழகம், அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஓபாமாவிற்கு கவுரவ பட்டம் வழங்கி கவுரவித்தது. கவுரவ பட்டம் பெற்ற மகிழ்ச்சியில் மிச்செல் ஓபாமா.
5 / 10
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை கவுன்சிலின் துவக்க விழா கூட்டத்தில் உரையாற்றும் கவுன்சில் தலைவர் நவி பிள்ளை.
6 / 10
மெக்ஸிகோ நாட்டில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அட்லாகொமுல்கோ நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்ஸ்ட்டிடியூசனல் ரெவல்யூசனரி கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் என்ரிக் பெனா நெய்டோ உரையாற்றினார்.
7 / 10
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில், தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்த மசாசூசெட்ஸ் மாகாண முன்னாள் கவர்னரும், குடியரசு கட்சி அதிபர் வேட்பாளருமான மிட் ரோம்னி.
8 / 10
அரசுமுறைப்பயணமாக நார்வே வந்துள்ள மியான்மர் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூயிக்கு தலைநகர் ஆஸ்லோவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அருகில் நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோனாஸ் கர் ஸ்டோய்இ.
9 / 10
இஸ்ரேல் பார்லிமென்டில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஷேக் ஹசன் யூசுப்பின் மகனும், பாலஸ்தீனிய மேல்சபை உறுப்பினருமான மோசாப் யூசெப் கலந்துகொண்டார்.
10 / 10
கிரீஸ் நாட்டில் நடைபெற்ற தேர்தலில், கன்சர்வேடிவ் நியூ டெமாக்ரடிக் கட்சி வெற்றி பெற்ற போதிலும், ஆட்சி அமைப்பதற்கு ஏற்ற ஓட்டுக்களை அதனால் பெற இயலவில்லை. இந்நிலையில், ஆட்சி அமைக்கும் பொருட்டு அக்கட்சி தலைவருடன் பேச்சு நடத்த பார்லிமென்ட் வருகை தந்த சோஷியலிஸ்ட் கட்சி தலைவர் ஈவாஞ்ஜலோஸ் வெனி ஜூலோஸ்.
Advertisement