உலகம் ஆல்பம்:

04-Dec-2012
1 / 10
பெல்ஜியம் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி ரோத்தம் கிளிண்டன், புரூசல்ஸ் நகரில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர்ரை சந்தித்துப் பேசினார்.
2 / 10
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தம்பதி சமேதராய் கலந்துகொண்ட அதிபர் பாரக் ஒபாமா.
3 / 10
அரசுமுறைப்பயணமாக துருக்கி சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அங்காரா நகரில் துருக்கி பிரதமர் ரெசெப் தய்யீப் எர்டாகன் உடனான கூட்டுப்பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
4 / 10
பெல்ஜியம் தலைநகர் புரூசல்சில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வந்த ஸ்பெயின் வர்த்தகத் துறை அமைச்சர் லூயிஜ் டி குயின்டோஸ் ஜூராடோ (வலது) பிரான்ஸ் நிதித்துறை அமைச்சர் பியர்ரி மாஸ்கோவிசியை சந்தித்துப் பேசினார்.
5 / 10
பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் துவங்கி உள்ள 30வது பிரான்ஸ்-இத்தாலி மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெற்ற கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலேண்டே (வலது) மற்றும் இத்தாலி பிரதமர் மரியோ மோன்டி கலந்துகொண்டனர்.
6 / 10
ஜெர்மனியின் ஹன்னோவர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாஞ்சலர் ஏஞ்சலா மெர்கெல் கலந்து கொண்டார்.
7 / 10
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ்.
8 / 10
மெக்ஸிகோவின் மெக்ஸிகோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய அதிபர் என்ரிக் பெனா நிய்ட்டோ.
9 / 10
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நிதித்துறை செயலாளர் திமோதி கெய்த்னர்.
10 / 10
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரான்சிற்கான இஸ்ரேல் தூதர் யோசி கால் கலந்துகொண்டார்.
Advertisement