உலகம் ஆல்பம்:

12-Dec-2012
1 / 10
மியான்மர் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி தமது சொந்த தொகுதியான கவ்மு நகரிலுள்ள பள்ளிக்கூடத்துக்கு சென்று மாணவர்களை சந்தித்து உரையாடினார்.
2 / 10
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை வரவேற்ற அந்நாட்டு அதிபர் பிரான்கோய்ஸ் ஹாலன்டே.
3 / 10
துருக்கியின் அங்காரா நகருக்கு வந்த பாலஸ்தீன அதிபர் மகமுது அப்பாஸ்க்கு (வலது) ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அருகில் துருக்கி அதிபர் அப்துல்லா குல்.
4 / 10
ஈராக்கின் பாக்தாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நூரி அல் மாலிகி, பாலஸ்தீன பிரதமர் சலாம் பய்யத் (இடது).
5 / 10
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கியூபாவில் சிகிச்சை பெற்று வரும் வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவெசை சந்தித்துவிட்டு நாடு திரும்பிய ஈகுவேடார் அதிபர் ரபெல் கோரியா.
6 / 10
அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தின் ரெட்போர்ட் நகரிலுள்ள கார் தொழிற்சாலையை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.
7 / 10
கனா அதிபர் தேர்தலில் ஜான் டிராமனி மகாமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அக்ரா நகரில் வெற்றி மகிழ்ச்சியை ஆதரவாளர்களுடன் பகிர்ந்து கொண்ட மகாமா.
8 / 10
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வந்துள்ள உகாண்டா அதிபர் யோவரி முஸ்வனியை வரவேற்கும் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின்.
9 / 10
மெக்சிகோ சிட்டி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கல்வி புரட்சி கொண்டு வருவது தொடர்பாக பேசிய அதிபர் என்ரிகோ பெனா நியடோ.
10 / 10
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் பார்லிமென்ட் உறுப்பினர்களை வரவேற்கும் பிரதமர் ராஜா பர்வெஸ் அஷ்ரப்.
Advertisement