உலகம் ஆல்பம்:

25-Dec-2012
1 / 10
தென் கொரியாவின் சியோல் நகரில், கிறிஸ்துமசையொட்டி, சமூக நலக்கூடத்தில், உணவுகள் பரிமாறப்பட்டன. தென் கொரியாவின் முதல் பெண் அதிபராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட, பார்க் ஜியூன்-ஹீ, (நடுவில் உள்ளவர்)உணவு பரிமாறும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
2 / 10
மியான்மர் நாட்டின் மையிக் ஆர்சிபலேகோ பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூயி.
3 / 10
ஜார்ஜியா நாட்டின் டிபிலிசி நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிரதமர் பிட்ஜினா இவானிஷ்வில்லி.
4 / 10
இங்கிலாந்து பக்கிங்ஹாம் அரண்மனையில் முப்பரிமாண வடிவிலான கிறிஸ்துமஸ் வாழ்த்தை, பிரத்யேக கண்ணாடி அணிந்து படிக்கும் ராணி எலிசபெத்
5 / 10
பஹ்ரைன் நாட்டின் ஷெகிர் நகரில் துவங்கியுள்ள வளைகுடா நாடுகளின் மாநாட்டில் கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
6 / 10
சிரியா தலைநகர் டமாஸ்கசில் அதிபர் பஷார் அல் ஆசாத்தை (வலது), சிரியாவிற்கான ஐக்கிய நாடுகளுக்கான அரபு லீக் பிரதிநிதி லக்தார் பிராஹிமியை சந்தித்துப் பேசினார்.
7 / 10
செசன்யா தலைவர் ரம்ஜான் கடிரோவ், நொவ்யி ஒடாகி கிராமத்திற்கு வருகை தந்தார்.
8 / 10
அமெரிக்காவின் ஹொனாலுலு நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிபர் பாரக் ஒபாமா, தனது மனைவி மிச்செலுடன் கலந்துகொண்டார்.
9 / 10
அரசுமுறைப்பயணமாக கியூபா நாட்டிற்கு வந்த பொலிவியா அதிபர் ஈவா மாரல்சை, ஏர்போர்ட்டில் வரவேற்ற கியூபா அதிபர் ரவுல் கேஸ்ட்ரோ.
10 / 10
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவதையடுத்து, தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் நேஷனல் ரைபிள் அசோசியேசன் உயரதிகாரி வெய்னி லாபியரி சிறப்புரையாற்றினார்
Advertisement